1. மற்றவை

தமிழகத்தில் இலவச WiFi வசதி! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Free WiFi facility in Tamil Nadu

சென்னையில் சீர்மிகு நகரம் திட்டம் செயலில் உள்ளது. திட்டத்தின் கீழ் மொத்தம் 50 இடங்களை தேர்வு செய்து அதில் தற்போதைக்கு 46 இடங்களில் WI-FI வசதி தொடங்க ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது .

அதன்படி தற்போது சென்னை மெரினா (Chennai Marina) கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 46 இடங்களில் WI-FI கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI (Free WIFI) ஐ மக்கள் பயன்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் செயலில் உள்ளன. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாகச் செயல்திறனை அதிகரிப்பதே ஆகும்.

மேலும் படிக்க:

வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

மாநகரின் முக்கிய இடங்களைக் கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசர காலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளைக் கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்து வருகின்றன.

இந்த திட்டத்தில் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வைஃபை தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச வைஃபை பெறுவதற்கு கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து ஓடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பொதுமக்கள் இலவச வைஃபை(Free-WiFi) இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க:

Business: ரூ.7 லட்சம் மாதம் வருமானம்!!! முதலீடு 3 லட்சம்!

ரூ. 65000 மட்டுமே பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் பைக் ! 90 கிமீ மைலேஜ்!

English Summary: Free WiFi facility in Tamil Nadu! Chennai Corporation announcement! Published on: 17 August 2021, 02:03 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.