1. மற்றவை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை! விவரம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Heavy Rain In Tamil Nadu

தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை  சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24-ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

செப்டம்பர் 23- தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 24- நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 25- கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 26- நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 27- தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

ஸ்டாலின் அளித்த விடியல்! 2,120.54 கோடி முதலீட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

weather: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை!

English Summary: Heavy rain for 5 days in Tamil Nadu! Details! Published on: 23 September 2021, 03:42 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.