1. மற்றவை

இந்தியாவின் முதல் மின்சார ஆட்டோ! அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம்!

KJ Staff
KJ Staff
Elelctric Auto

மேக் இன் இந்தியாவை உருவாக்குவதற்கும், மலிவு விலையில் மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கும், மின்சார வாகனங்கள் இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.  இந்தியாவிற்கு தற்போது பெரிய எண்ணிக்கையில்  மற்றும் மலிவு விலையில் மின்சார வாகனங்கள் தேவை.  மஹிந்திரா EV சாலை வரைபடத்திற்காக காத்திருக்கவில்லை  மேலும் தனக்கென ஒரு சாலை வரைபடத்தை உருவாக்கும் என்று மஹிந்திரா நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். மேலும், மகேந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு கூறுகையில், இந்த ஆட்டோ வாங்குவதன் மூலம் 20% பணத்தை சேமிக்கலாம் என்றார்.

மஹிந்திரா ட்ரீயோ இப்போது பெங்களூரில் உள்ள மஹிந்திரா எலக்ட்ரிக் ஆலையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக டெல்லி, நொய்டா, குர்கான், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் தயாரிப்பு அதிவேகமாக நடந்து வருகிறது.  தற்போது பல்வேறு நகரங்களில் பயன்படுத்தப்படும் இ-ரிக்‌ஷாக்களை விட டிரியோ பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்றும், குறைந்த விலையான, கிலோமீட்டருக்கு 50 பைசா என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம் என மஹிந்திரா கூறுகிறது.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு பயப்படும் ஏழை ஏழியோருக்காகவே, மஹிந்திரா நிறுவனம் இந்த புதிய மின்சார ஆட்டோ ரிக்‌ஷாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மஹிந்திரா TREO ஆட்டோ ரிக்ஷா குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் திறன் கொண்டது.

மஹிந்திரா TREO-வின் மைலேஜ் சிறப்பாகவுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணம் செய்ய முடியும். 141 கிமீ வரை சென்றதற்கான பதிவும் உள்ளது. இந்த ஆட்டோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிலோமீட்டர் ஆகும். 0-20 கிமீ வேகத்தை 2.3 வினாடிகளில் எட்டிவிடும். ட்ரீயோ ஆட்டோவை, வெறும் 3 மணிநேரம் 50 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். இதை 15 ஆம்ப் சாக்கெட் மூலம் எளிதில் சார்ஜ் செய்யலாம்.

வீல் பேஸ் 2073 மிமீ. கொண்ட இந்த மின்சார ஆட்டோவில் போதுமான இடவசதி உள்ளது, அதில்  பயணிக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மஹிந்திராவின் குறைந்த பராமரிப்பு லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட மூன்று சக்கர வாகனமாகும். இந்த ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்கெற்ப சிறப்பு அம்சங்களை வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க:

40,000 ரூபாயில் 66Km மைலேஜ் வழங்கும் Yamaha Scooter!

வெறும் 25,000 ரூபாய்க்கு Scooter வாங்க வாய்ப்பு!தாமதம் வேண்டாம்!

English Summary: Mahindra Introduces India's first electric auto! Published on: 08 December 2021, 05:00 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.