1. மற்றவை

பட்டினியால் இறக்கும் கடற்பசுக்கள் -அமெரிக்காவில் சோகம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Sea Cow

இந்த ஆண்டு அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் கடற்பசுக்கள் பட்டினியால் இருந்து வருகின்றன என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா அருகில் இருக்கும் கடற்பகுதியில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 2 வரை தோராயமாக 841 கடற்பசுக்கள் இறந்துள்ளன.

இதற்கு முன்பு கடந்த 2013ஆம் ஆண்டு நச்சு பாசி காரணமாக 830 கடற்பசுக்கள் இறந்தது அதிக எண்ணிக்கையாக இருந்தது.

கடற்பசுக்கள் உணவுக்காக புசித்து வரும் கடலடியில் உள்ள புற்கள், கடல் மாசு ஏற்பட்டு வரும் காரணத்தால் அழிந்து வருகிறது என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவின் கடற்கரைகளில் அதிகரித்து வரும் கழிவு மாசுபாடுதான் முக்கிய பிரச்சினை என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால், கடலடியில் உள்ள புற்கள் வேகமாக அழிந்து வருகின்றன.

பெரும்பாலான இறப்புகள் குளிர் கால மாதங்களில் ஏற்படுகின்றன என்றும், கடற்பசுக்கள் உணவு தேடி இந்திய நதி லகூனுக்கு இடம்பெயர்ந்தன,அங்கு பெரும்பாலான கடல் புற்கள் அழிந்திருந்தன என்றும் புளோரிடாவின் மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக, அட்லாண்டிக் கடற்கரையில் கடற்பசுக்கள்  இடம்பெயர்ந்து செல்கின்றன. இதன் காரணமாகக் கடந்த மாதம் அதிக எண்ணிக்கையில் உயிரினங்கள் படகு மோதி இறந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 63 கடல் பசுக்கள் படகு மோதி இறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படகுகள் மோதுவது இந்த கடல் உயிரினங்களுக்கு ஒரு முக்கிய ஆபத்தாக கருதப்படுகிறது என்று ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

கடற்பசுக்களை அச்சுறுத்தலில் இருக்கும் உயிரினமாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால், இதனைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கை தேவை என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா கடலில் கிட்டதட்ட 6,300 கடற்பசுக்கள் வாழ்ந்து வருவதாக அரசு கூறுகிறது. சமீபத்திய மாதங்களில், மட்டும் புளோரிடாவில் இருக்கும் கடல் உயிரியலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடற்பசுக்கள் இறப்பது குறித்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:

வேளாண்,உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அதிரடி உத்தரவு!!

எந்நேரத்திலும் கொரோனா 3வது அலை தாக்கலாம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!

செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

English Summary: Sea cows dying of starvation - tragedy in America Published on: 13 July 2021, 11:03 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.