1. மற்றவை

ரூ.10 லட்சம் வரை மானியம் கிடைக்கும் சூப்பர் தொழில்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Super business with a subsidy of up to Rs 10 lakh!

உணவுத் துறையில் ஏதேனும் தொழில் தொடங்கி வருமானம் பார்க்க ஆசைப்படுபவர்களை ஊக்குவிக்க அரசு 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வருகிறது. எனவே இந்தத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, உணவுப் பதப்படுத்தும் தொழிலைத் தொடங்க நாமும் முன்வருவோம்.

இந்தியாவில் உணவுப் பதப்படுத்துதல் துறை (Food Processing) தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.நாடு முழுவதும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, மாசாலாப் பொருட்கள் என பலவகையான உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கான மார்க்கெட் இந்தியாவில் வளர்ந்துள்ளது.
இத்தனை வாய்ப்புகள் இருக்கும்போதிலும், புதிதாக தொழில் முனைவோர் உணவுப் பதப்படுத்துதல் துறையில் பெரிதாக களம் இறங்குவதில்லை.

எனவே, உணவுப் பதப்படுத்துதல் துறையில் புதிய தொழில்களை ஊக்குவிக்க PMFME (PM Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவுப் பதப்படுத்துதல் துறையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு PMFME திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று உணவுப் பதப்படுத்துதல் ஆலைகளை அமைக்கலாம்.

தகுதி

  • 18 வயதை தாண்டிய அனைவருமே PMFME திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த புதிய ஆலைகளை அமைப்பதற்கு மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருக்கும் ஆலைகளை மேம்படுத்துவதற்கும் PMFME கீழ் உதவி பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ், தொழிலுக்கான மூலதனத்தில் 35% மானியமாகப் பெறலாம். அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், www.pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

கோடை வெயிலை Beat செய்ய - 5ல் ஒன்று போதுமே!

பாசனத்திற்கு பி.வி.சி., பைப் வாங்க விவசாயிகளுக்கு ரூ. 15,000 மானியம்!

English Summary: Super business with a subsidy of up to Rs 10 lakh! Published on: 12 March 2022, 12:26 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.