1. மற்றவை

இன்று சர்வதேச நிலவு தினம்: சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

R. Balakrishnan
R. Balakrishnan
International Moon Day

1969ம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அப்பல்லோ 11 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதனை கொண்டாடும் விதமாக இந்தாண்டு முதல் ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச நிலவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக, ஜூலை 21ல் அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் முதன்முதலாக நிலவில் கால்பதித்தனர். கடந்த டிசம்பர் 9, 2021 இல் மூன் வில்லேஜ் அசோசியேஷன் மற்றும் நிறுவனத்தில் உள்ள பல குழுக்கள் சமர்ப்பித்த முன்மொழிவினை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. இந்த விண்ணப்பம் ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிலவு தினம் (Moon Day)

நிலவின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கியதை உலகமே உற்று நோக்கியது. அப்போது, நீல் ஆம்ஸ்ட்ராங் ஏணியில் இறங்கி, "இது ஒரு மனிதனுக்கு ஒரு சிறிய படி, மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்" என்றார். சர்வதேச நிலவு தினம், ஆண்டுதோறும் நிலவின் நிலையான பயன்பாடு , ஆய்வு மற்றும் நிலவை சுற்றியுள்ள நடவடிக்கைகளின் ஒழுங்குமுறைகளின் தேவை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனைத்து மட்டத்திலும் துவக்க ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறைக்கு மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்வெளியின் பயன்பாடு தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அது தொடர்பான விவகாரங்களை விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவால் (COPUOS) கையாண்டு வருகிறது.

விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பதிவான அப்பல்லோ 11 பயணத்தின் சுவாரஸ்யமான 20 தகவல்கள் இதோ..!

  • அப்பல்லோ 11 முதன்முதலில் ஒரு குழுவினர், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய திட்டம் ஆகும்.
  • விண்கலம் நிலவை சென்றடைய 72 மணி நேரம் எடுத்து கொண்டது.
  • நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலில் நிலவில் கால்பதித்த மனிதர் ஆவார்.
  • ஆல்ட்ரின், ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த 19 நிமிடங்களுக்கு பிறகு நிலவில் கால் பதித்தார்.
  • அப்பல்லோ விண்கலம், மணிக்கு 24,236 மைல் வேகத்தில் பயணித்தது.
  • வழக்கு காரணமாக ஆல்ட்ரின் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
  • அப்பல்லோ 11 திட்டம் தோல்வியடைந்தால், அதற்கென தனி உரையை அதிபர் நிக்சன் தயாரித்து வைத்திருந்தார்.
  • அப்பல்லோ 11 விண்கல திட்டம், ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டறியந்த 66 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்தது
  • ரைட் சகோதரர்களின் விமான துண்டுகள், விண்கலத்தில் நிலவுக்கு எடுத்து செல்லப்பட்டது.
  • சுமார் 4 லட்சம் பேர், அப்பல்லோ 11 திட்டத்திற்காக பணியாற்றி உள்ளனர்.
  • நிலவில், துப்பாக்கி குண்டு துகள்கள் போன்ற நாற்றம் இருந்துள்ளது.
  • நிலவில் அமெரிக்க கொடியை நாட்டுவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்துள்ளது.
  • அமெரிக்க கொடியை எடுத்து செல்வதும் கடினமாக ஒன்றாக இருந்தது
  • அப்பல்லோ 11 விண்கலம், ஈகிள் என அழைக்கப்பட்டது.
  • விண்வெளி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு பெறுவதில் சிரமம் இருந்தது.
  • நிலவில் கால் பதித்த தடங்கள் இன்னமும் அப்படியே இருக்கிறது.
  • நிலவில் இருந்து பல பொருட்களை நினைவாக எடுத்து வந்தனர்.
  • ஒரு பேனா முனை திட்டத்தின் பணியில் முக்கிய பங்கு வகித்தது.
  • நிலவில் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருந்த சமயத்தில், ரஷ்யாவின் விண்கலம் வெடித்து சிதறியது
  • ஆபத்தான கட்டத்தில் இருந்த போது நீல் ஆம்ஸ்ட்ராங்கின் இதயத்துடிப்பு 150 ஆக அதிகரித்தது.
  • விண்கலம் பூமிக்கு திரும்பும் போது வெடிக்க வாய்ப்பிருந்ததால், பார்வையாளர்கள் வெகு தொலைவில் இருக்க நாசா அனுமதி அளித்திருந்தது.

மேலும் படிக்க

யோகா: செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!

சூரிய புயல், இன்று பூமியைத் தாக்க வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

English Summary: Today is International Moon Day: Here's the Interesting Facts! Published on: 20 July 2022, 07:20 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.