1. மற்றவை

WagonR EV : மின்சார வாகன சந்தையில் Maruti-யின் அறிமுகம்: விவரங்கள் இங்கே..

Sarita Shekar
Sarita Shekar

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் , இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இப்போது இந்தியாவில் மின்சார கார் சந்தையில் அதிரடியாக நுழைந்துள்ளது. மின்சார வாகன சந்தையில் தன்னுடைய அறிமுகத்திற்கு, மாருதி, தனது மிகவும் பிரபலமான 5 இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக், WagonR-ஐ தேர்வு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு பேஸ்புக் பக்கம் WagonR EV-யின் தயாரிப்புக்கு தயாரான பிரிவின் புகைபடங்களை பகிர்ந்து கொர்ந்துள்ளது. இந்த புகைபடங்களின்படி, இந்த கார் வெள்ளை நிறத்தில் உள்ளது. இது வழக்கமான வேகன்ஆர் கார்களைப் போலவே தோன்றுகிறது. இது முன் மற்றும் பின்புறத்தில் ஒரு முக்கிய பிராண்டிங்குடன் வருகிறது.

கடந்த ஆண்டு ஹரியானாவின் குருகிராமில் சாலை சோதனையின்போது இந்த கார் முன்பு காணப்பட்டது.

அறிக்கையின்படி, மாருதி சுசுகி (Maruti Suzuki), WagonR EV இப்போதைக்கு சில குறிப்பிட்ட வணிக ஆபரேட்டர்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் WagonR EV இந்திய சந்தையில் நுழையும் என்ற ஊகங்களும் உள்ளன. இந்த காரின் விலை ரூ. 9 லட்சத்தில் தொடங்களாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி எதிர்காலத்தில் மின்சார மூலம் இயங்கும் மேலும் சில கார்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

 

அரசு ,மின்சார வாகனங்களையும்  ஊக்குவிக்கிறது

பசுமையான சூழலை மேம்படுத்த , மின்சார வாகனங்களைப் (Electric Vehicles) பயன்படுத்துவதையும் இந்திய அரசு ஊக்குவிக்கிறது.

சமீபத்தில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றும் போது மின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டங்களை வெளிப்படுத்தினார். 69,000 பெட்ரோல் பம்புகளின் உள்கட்டமைப்பை மின்சார வாகனங்களுக்கு ஏற்றவாறு மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தியர்களிடையே EV-க்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் கோடிட்டுக் காட்டிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

சமீபத்தில், புது டெல்லியில் இருக்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் மின்சார வாகனங்களைதான் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. தேசிய தலைநகரில் அமைந்துள்ள அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை அலகுகளும் மின்சார வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என மின் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

2030 க்குள் அனைத்து வாகனங்களிலும் 30% மின்சாரவாகனமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. மின்சார வாகனங்களை கட்டாயமாக பயன்படுத்துவது தொடர்பான இந்த அறிவிப்பு இந்தத் துறைக்கு ஒரு பெரிய உத்வேகம்.

இந்த விதிப்படி தேசிய தலைநகர் பகுதி எல்லைக்குள் அனைத்து வித பயணங்களும் மின்சார பயன்முறையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

மேலும் படிக்க

Ather Energy மின்சார ஸ்கூட்டர் காப்புரிமை கசிந்தது!

சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

Maruti Suzuki : பம்பர் சலுகை , மிகக் குறைந்த விலையில் கார்களை வாங்கலாம்!

English Summary: WagonR EV: Maruti's Introduction to the Electric Vehicle Market: Price, Other Details Here Published on: 22 May 2021, 02:46 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.