1. வெற்றிக் கதைகள்

காளானை பயன்படுத்தி செய்யப்படும் லட்டு, ஊறுகாய் மற்றும் ஜாம்களுக்கான தேவை அதிகரிப்பு!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Increased demand for laddu, pickles and jams made using mushrooms!

பாரம்பரிய விவசாயத்திலிருந்து மாறி, காளான்களை பயிரிட்டு, இனிப்புகள், ஊறுகாய், ஜாம் போன்ற பலவகையான பொருட்களை விற்பனை செய்யும் விவசாயி அசோக்குமார் குறித்து அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் அதை எப்படி செய்கிறார் என்று தெரிந்து கொள்வோம்?

அசோக் குமார் வஷிஸ்ட் ஹரியானாவில் இருக்கும் விவசாயி ஆவார், அவர் தன்னை ஒரு முற்போக்கான விவசாயியாக  அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர் காளானிலிருந்து உருவாக்கப்பட்ட பிற புதுமையான உணவுப் பொருட்களுடன் லட்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறார்.

10ம் வகுப்பு முடித்த அசோக், கடந்த சில ஆண்டுகளாக காளான் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். பயிரிடத் தொடங்கியபோது, காளான்களைப் பதப்படுத்துவதன் மூலம் தனது சொந்தத் தொழிலை விரிவுபடுத்தித் தொடங்க விரும்பினார்.

2007-ம் ஆண்டு வரை எனது ஐந்து ஏக்கர் குடும்பச் சொத்தில் பாரம்பரிய விவசாயம் செய்து வந்தேன். ஆனால் நான் எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்பினேன், அப்போதுதான் காளான் வளர்ப்பதை நான் கண்டுபிடித்தேன், ”என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அசோக் கூறும்போது, தான் பல ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறுகிறார். முர்தல் காளான் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்ற அவர், அங்குள்ள ஆராய்ச்சியாளர்களுடன் நேரத்தைச் செலவிட்டார். "இந்த மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் அஜய் சிங் யாதவிடம் பயிற்சியும் பெற்றேன்" என்று அவர் கூறுகிறார்.

 "நான் சிப்பி காளான்களை நடவு செய்வதன் மூலம் எனது வணிகத்தை தொடங்கினேன், இது பெரும்பாலும் இந்தியாவில் டிங்கிரி காளான்கள் என்று அழைக்கப்படுகிறது," என்று அவர் கூறினார். இது அவரது முதல் முயற்சி என்பதால், வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை என்றும் பதிவு செய்தார். 

"சிறிய ஆரம்ப செலவில் காளான்களை வளர்க்க முடியும் என்பதால், தோல்விகள் அதிகம் பாதிக்கவில்லை," என்று அவர் விளக்குகிறார். பல சுற்று சோதனை மற்றும் பிழைகளுக்குப் பிறகு, அசோக் காளான் வளர்ப்பின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்.

படிப்பை முடித்த பிறகு, அவர் மையத்துடன் தொடர்பு கொண்டு, தொடர்ந்து அவர்களின் உதவியை நாடினார். "காளான் உற்பத்தித் துறையில் பல்வேறு முன்னேற்றங்களைத் தொடர, கிருஷி விக்யான் கேந்திரா மற்றும் விவசாயப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களையும் தொடர்பு கொண்டேன்," என்று அவர் மேலும் கூறினார்.

அவருக்கு அவரது மனைவி சுனிதா நன்கு ஆதரவளித்தார், அவர் உதவத் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியும் பெற்றார். "ஒவ்வொரு தொகுதி காளான்களும் கடந்த சாகுபடியை விட சிறப்பாக கிடைத்தது,"இது மேலும் நம்பிக்கையை வளர்ந்ததாக கூறினார்."

இந்த தம்பதியினர் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர், இது வீட்டில் பல சோதனைகளுக்கு வழிவகுத்தது. "எங்கள் அன்றாட உணவில் காளான்களைச் சேர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க அவரது மனைவி மணிநேரம் செலவிடுவார்" என்று அசோக் கூறுகிறார். "அவர் ஊறுகாய், ஜாம் மற்றும் பல வகையான காளான் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்," என்று அவர் விளக்குகிறார். 

மெதுவாக, காளானால் செய்யப்படும் இந்த விஷயங்களுக்கான தேவை அதிகரித்தது, மேலும் மக்கள் அவற்றுக்கான பிரீமியம் செலுத்தத் தயாராக இருந்தனர். "மக்கள் காளானை ஒரு கூட்டாகவோ அல்லது ஊறுகாயாக கூட சாப்பிட்டிருக்கலாம், ஆனால் நாங்கள் அதை லட்டு, பர்ஃபிகள் மற்றும் ஜிலேபி போன்ற பிற வகையான இனிப்புகளை தயாரிக்க பயன்படுத்த ஆரம்பித்தோம்," என்று அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, இந்த தம்பதியினர் தங்கள் தயாரிப்புகளை விற்க மகரிஷி வஷிஸ்ட் காளான்களை நிறுவியது மற்றும் FSSAI அங்கீகாரத்தைப் பெற்றது. இதுவரை ஹரியானாவில் காளான் லட்டு அல்லது  பிற பொருட்கள் சமைக்கும் யாரையும் தான் இதுவரை சந்தித்ததில்லை என்று அசோக் பெருமிதம் கொள்கிறார்.

இன்று, பொருட்கள் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கோவிட் நோய்க்கு முன், அசோக் மற்றும் சுனிதா ஆகியோர் மாதத்திற்கு ரூ. 1 லட்சத்தை சம்பாதித்து வந்தனர், ஆனால் லாக்டவுன் காலத்தில் அவர்களது வருமானம் குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

சுனிதா மற்றும் அசோக் ஆகியோர் ஏராளமான பரிசுகளையும் மாநில அங்கீகாரங்களையும் பெற்றுள்ளனர். 2017 இல் சூரஜ்குண்டில் நடந்த 'அக்ரி லீடர்ஷிப் உச்சிமாநாட்டில்' அவர்கள் முதல் இடத்தைப் பெற்றனர், அதே ஆண்டு ஹரியானா கோல்டன் உத்சவ் ஏற்பாடு செய்த விவசாய மேளாவில் சுனிதா கௌரவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க:

காளான் வளர்ப்பில் இருமடங்கு இலாபம்! விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்!

English Summary: Increased demand for laddu, pickles and jams made using mushrooms! Published on: 20 November 2021, 02:36 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.