1. வெற்றிக் கதைகள்

UPSC தேர்வில் வெற்றிபெற்ற ஜாக்ரித்தி, இலக்கு- கிராமப்புற இந்தியாவின் மேம்பாடு!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Jagriti, who won the UPSC exam, aims at the development of rural India

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவாகும், UPSC இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இந்தத் தேர்வில் வெற்றிபெற அதற்கு அர்ப்பணிப்புள்ள ஆன்மாவும் சரியான உத்தி மற்றும் கடின உழைப்பும் தேவை.

இந்தத் தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை முதன்மைத் தேர்வு, இது புறநிலை வகை, இரண்டாவது நிலை மெயின்ஸ் எழுத்துத் தேர்வு மற்றும் மூன்றாவது நிலை நேர்காணல் வாய்மொழி மதிப்பீட்டு நிலை தேர்வு ஆகும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்கள் முதல் முயற்சியிலேயே இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற விரும்புகிறார்கள், அது உண்மையில் சாத்தியம் தான்.

நீங்கள் உண்மையிலேயே எதை நோக்கி பயணம் செய்கிறீர்களோ அதை கண்டிப்பாக அடைவீர்கள். இந்த நம்பிக்கை யாரிடமெல்லாம் இருக்கிறதோ கண்டிப்பாக அவர்கள் நினைக்கும் இடத்தை பெறுவார்கள். போபாலில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் ஜாக்ரித்தி. கிரிஷி ஜாக்ரனுடன் ஒரு பிரத்யேக நேர்காணலில், ஜாக்ரித்தி தனது கனவை அடைய உதவிய சில குறிப்புகள் & தந்திரங்களை பகிர்ந்து கொண்டார்.

உங்களுக்கு எப்போதும் ஒரு வழி உள்ளது என்பதை அவர் தேர்வில் வெற்றி அடைந்து நிரூபித்தார். அவர் முதலில் தேர்வில் வெற்றி பெறவில்லை, தான் வேலை செய்துகொண்டே படித்ததாகவும் கூறினார். யுபிஎஸ்சி  2019 இல் நடந்த தேர்வில் தோல்வியுற்றதாக கூறினார். பிறகு தனது பெற்றோர்களிடம் தான் வேலையை விடுவதாக கூறியுள்ளார். வேலையை விட்டுவிட்டுத் தான் UPSC தேர்வுக்கு படிக்க போவதாக வெளிப்படுத்தியுள்ளார். அதற்க்கு அவருடைய குடும்பத்தினரும் ஆதரவளித்துள்ளனர். 

பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்ய போகும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் அதிகக்  குழப்பத்தை சந்திக்கின்றனர். இது முற்றிலும் சாதாரணமானது, நமக்கு விருப்பமான பாடத்தை படித்து அது சார்ந்த தொழிலை செய்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இலக்கு நிர்ணயித்த பிறகு அதனை அடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றார் போல கால அட்டவணை தயார் செய்து அதன் படி நடக்க வேண்டும்.

ஜாக்ரித்தி வெறும் 8 முதல் 9 மணி நேரம் மட்டுமே தன்னுடைய படிப்பிற்காக செலவளித்துள்ளார். படிக்கும் நேரத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து படித்துள்ளார். இதனை செய்வதற்கு கவனம் மற்றும் உறுதி இருந்தால் போதுமானது. நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஜாக்ரித்தி காலை 6 மணிக்கு எழுந்து தன்னை ஒரு நிலை படுத்த தியானம் செய்வதாக கூறினார்.

தியானத்திற்கு பிறகு சிற்றுண்டி எடுத்துக்கொண்டு படிக்க செல்வதாக கூறினார்.காலை வேலைகளில் அதிக நேரம் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதாக கூறினார். மேலும் படிப்பதில் அழுத்தம் எடுத்துக்கொள்ள கூடாது, நாம் படிப்பதை ஆர்வமோடு படிக்க வேண்டும்.

தனது குடும்பத்தினர் அவருக்கு ஏற்றார் போல் ஆதரவு அளித்ததோடு தன்னுடைய நண்பர்களும், ஆசிரியர்கள், குடும்பத்தினர் அவரை அதிகமாக ஊக்குவித்ததாக கூறினார். தானாகவே படித்ததாகவும், எந்த விதமான தனியார் பயிற்சி நிலையங்களை அணுகவில்லை என்று கூறியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் போன்ற பல்வேறு சிறந்த வளங்களை ஒருவர் பயன்படுத்த முடியும்.சுய படிப்பு எப்பொழுதும் உங்களுக்கு கை கொடுக்கும். மற்ற நிறுவனங்களையோ மையங்களையோ நம்புவதற்கு பதிலாக நம் மீது நாமே நம்பி படித்தோமானால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

மேலும் ஜாக்ரித்தி தன்னை ஊக்கப்படுத்தும் நபர்களுடன் அதிக நேரம் செலவளித்துள்ளார். எதிர்மறை எண்ணங்களை கொடுக்கும் நபர்களிடம் இருந்து தூரமாகவே இருந்துள்ளார். தற்போது வெற்றி அடைந்து நாட்டிற்கு  பெருமை சேர்த்துள்ளார் வெற்றி பெண்மணி ஜாக்ரித்தி.

மேலும் படிக்க...

UPSC தேர்வில் வெற்றி கண்ட விவசாயி மகள் ஹிமானி!

English Summary: Jagriti, who won the UPSC exam, aims at the development of rural India Published on: 07 October 2021, 04:16 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.