MFOI 2024 Road Show
  1. வெற்றிக் கதைகள்

மேத்யூக்குட்டி: இளம் விவசாயி, விவசாயத்தின் பற்றி இவரது பார்வை என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Meet the Farmer Who Transformed His Family's Farm into a Thriving Organic Business
Meet the Farmer Who Transformed His Family's Farm into a Thriving Organic Business

மேத்யூக்குட்டி டாம் இந்தியாவில் உள்ள சிறிய நகரமான கோட்டயத்தில் பிறந்து வளர்ந்தவர். MBA முடித்ததும் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும், அவரது இதயம் வேறொன்றிற்காக ஏங்கியது. அவர் தனது முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு விவசாயியாக மாற விரும்பினார்.

விவசாயத்தில் சவால்கள் இருந்தபோதிலும், நம்பிக்கையோடு தனது சொந்த ஊருக்குத் திரும்பி தனது குடும்பத்தின் விவசாய நிலத்தை நிர்வகிக்க முடிவு செய்தார். இருப்பினும், பாரம்பரிய விவசாயிகள் பெரும்பாலும் இடைத்தரகர்களால் சாதகமாகப் பயன்படுத்தப்படுவதை அவர் விரைவில் கண்டுபிடித்தார். உயர்தர ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்த போதிலும், ஆரம்ப ஆண்டுகளில் லாபம் ஈட்ட முடியாமல் மாத்யூக்குட்டி போராடினார்.

தனது முயற்சியை வெற்றியடையச் செய்யத் தீர்மானித்த மாத்யூகுட்டி, விவசாயத்தில் தனது திறமையுடன் வணிக அறிவையும் இணைக்க முடிவு செய்தார். அவர் ஒரு பண்ணையில் பயிர்களை வளர்ப்பது மற்றுமின்றி விலங்குகளை வளர்ப்பது உள்ளிட்ட கலப்பு அல்லது ஒருங்கிணைந்த விவசாய நுட்பங்களை கொண்டு விவசாயம் செய்ய தொடங்கினார். அவர் ஒரு பொருளின் கழிவுகளை மற்றொரு பொருளுக்கு உணவாகப் பயன்படுத்தினார், இது கழிவுகளைக் குறைக்கவும் செலவைக் குறைக்கவும் உதவியது.

மேத்யூக்குட்டியின் பண்ணை, TJT, இப்போது பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், அலங்கார மீன்கள் மற்றும் பறவைகளை உற்பத்தி செய்கிறது. பண்ணையில் ஐந்து குளங்கள் உள்ளன, அங்கு மேத்யூக்குட்டி பல்வேறு வகையான மீன்களை வளர்க்கிறார். அவர் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்டீன் உள்ளிட்ட பருவகால காய்கறிகள் மற்றும் கவர்ச்சியான பழங்களையும் வளர்க்கிறார். மாதம் சராசரியாக இரண்டு டன் விளைபொருட்களை விற்பனை செய்வதன் மூலம், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். மாத்யூக்குட்டி தனது விளைபொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு உள்ளூரில் உள்ள தனது கடை மூலம் விற்பனை செய்கிறார் அல்லது அவர்களது வீடுகளுக்கு வழங்குகிறார்.

மேத்யூக்குட்டியின் ஒருங்கிணைந்த பண்ணையம் மாதிரியின் நன்மைகளில் ஒன்று கழிவுகளைப் பயன்படுத்துவதாகும். அவர் தனது பயிர்களுக்கு கால்நடைகளின் கழிவுகளை உரமாக பயன்படுத்துகிறார், மேலும் அதை விவசாயிகளுக்கும் நகர்ப்புற மாடி தோட்டக்காரர்களுக்கும் விற்கிறார். கூடுதலாக, விலங்குகளின் கழிவுகள் ஒரு உயிர்வாயு ஆலையில் பயன்படுத்தப்படுகின்றன, இது முழு குடும்பத்தின் மற்றும் செயலாக்க அலகு ஆண்டு முழுவதும் LPG தேவைகளை உள்ளடக்கியது. மாத்துகுட்டியின் பண்ணையில் கால்நடைகளுக்குத் தீவனம் வளர்க்க அரை ஏக்கர் இடம் உள்ளது, இது செலவைக் குறைக்க உதவுகிறது.

வெற்றிகரமான பண்ணையைக் கட்டியமைப்பதில் மேத்யூகுட்டியின் முயற்சிகள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2015ல் கேரள அரசின் இளம் விவசாயி விருதையும், 2022ல் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையின் இளம் விவசாயி விருதையும் பெற்றார்.

மேலும் இளைஞர்கள் அவரைப் பின்பற்றி விவசாயிகளாக வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் மேத்யூக்குட்டி. இன்றைய பொருளாதாரத்தில் வெற்றிகரமான விவசாயத் தொழிலைத் தக்கவைக்க பாரம்பரிய விவசாய முறைகள் போதாது என்று அவர் நம்புகிறார். மாறாக, ஆர்வமுள்ள விவசாயிகளை நவீன தொழில் நுட்பங்களை இணைத்து விவசாயம் செய்பவர்களாக மாற அவர் ஊக்குவிக்கிறார். இதற்கு அதிக முதலீடும் முயற்சியும் தேவைப்படலாம் என்றாலும், நீண்ட காலத்திற்கு வெற்றி நிச்சயம் என்று மேத்யூகுட்டி நம்புகிறார்.

மேலும் படிக்க:

'சிறுதானிய மதிப்புக்கூட்டு தொழில் வாய்ப்பு மேம்படுத்துதல்' தேசிய அளவிலான இலவச ஆன்லைன் பயிற்சி

B.E, B.Arch படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Meet the Farmer Who Transformed His Family's Farm into a Thriving Organic Business Published on: 09 May 2023, 04:49 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.