1. வெற்றிக் கதைகள்

ஆண்டுக்கு 1.18 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி RFOI விருதினை வென்றார் பெண் விவசாயி ஏ.வி.ரத்னம்மா

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Rathnamma

மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் MFOI 2023 விருது விழாவில் பில்லினியர் விருது ( Richest farmer of India- RFOI) கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுக்கா, குண்டமானட்டா கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.ரத்னம்மாவுக்கு வழங்கப்பட்டது.

உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையிலும் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.  இதில் RFOI விருதுக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், கர்நாடகாவினைச் சேர்ந்த பெண் விவசாயியான ஏ.வி.ரத்னம்மா இவ்விருதினை ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவிடமிருந்து இன்று (டிச.8, 2023) பெற்றார்.

ஏ.வி.ரத்னம்மா பின்பற்றிய விவசாய முறை: ரத்னம்மா 2 ஏக்கரில் மா சாகுபடி செய்து வருகிறார். ஒரு ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். மற்றொரு ஏக்கரில் பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்ட கலப்பு விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ICAR-KVK, கோலார் அறிவுறுத்தும் சிறந்த தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி வேளாண் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். கோலார் கே.வி.கே., ஏற்பாடு செய்த வளாகப் பயிற்சியில் ஐந்து நாட்கள் தொழில் பயிற்சி பெற்றுள்ளார்.

தானியங்கள் சாகுபடி செய்ததன் மூலம் ஏ.வி.ரத்னம்மா புகழ் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. 4 ஏக்கர் விவசாய நிலத்தில் இவர் செய்த சாதனைகள் மற்ற விவசாயிகளுக்கு உந்துசக்தியாக திகழ்கிறது. தானியங்களின் பயன் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அனைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஊறுகாய் மற்றும் மசாலா தூள் தயாரிப்பு:

ஏ.வி.ரத்னம்மா விவசாயத்துடன் மதிப்பு கூட்டல் முறையிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயத்துடன், தானியங்களின் பயிர்கள் பதப்படுத்துதல், மாம்பழம், பாதாம் மற்றும் தக்காளியைப் பயன்படுத்தி ஊறுகாய் மற்றும் மசாலா தூள் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் ICAR-IIHR, பெங்களூர், ICAR-IIMR ஹைதராபாத் மற்றும் UHS பாகல்கோட்டில் இருந்து பல பயனுள்ள மற்றும் தகவல்களை பெற்று அதனை தனது விவசாய முறைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.

பதப்படுத்துதல் மையம் மூலம் வருமானம் ஈட்டல்:

ICAR-KVK குறைந்த செலவில் விளைப்பொருள் பாதுக்காக்கும் அறையினை பயன்படுத்த விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏ.வி.ரத்னம்மா இயற்கையாகவே மாம்பழங்களை தங்கள் தோட்டத்தில் இருந்து பழுக்க வைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் FPO, SHG உறுப்பினர்களிடமிருந்து மாம்பழங்களை வாங்கி விற்கிறார்கள். பழுத்த மாம்பழங்களை 3 கிலோ பெட்டிகளில் பேக்கிங் செய்து பிராண்டிங் செய்து பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மூலமாகவும், ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலமாகவும் விற்பனை செய்து வ்ருகிறார்.

இந்த பணி ரத்னம்மாவின் புகழ் கர்நாடகா முழுவதும் பரவ காரணமாக இருந்தது. ஏ.வி.ரத்னம்மா 2018-19 முதல் தானியங்களை பதப்படுத்தத் தொடங்கினார். இந்த நிலையில் அவருக்கு அரசின் உதவியும் கிடைத்தது. வேளாண்மைத் துறையும் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மண்ணில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை வறண்டுவிட்டன- MFOI நிகழ்வில் SML இயக்குநர்

வருமானம் ஈட்ட பல வழிகள்:

ஏ.வி.ரத்னம்மா ஆண்டுக்கு 1.18 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். விவசாயப் பொருட்களுடன், தானியங்கள் உற்பத்தியிலும், தானியங்களை பதப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளார். தானியம் மற்றும் தானிய மால்ட்,தானிய தோசை கலவை மற்றும் தானிய இட்லி கலவை மற்றும் ஊறுகாய், கற்றாழை ஊறுகாய், தக்காளி ஊறுகாய், மசாலா தூள் உட்பட மாம்பழ விற்பனையையும் தங்கள் சொந்த பிராண்ட் பெயரில் விற்பனை செய்கின்றனர்.

RFOI விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஏ.வி.ரத்னாம்மாவுடன்- சட்டீஸ்கர் மாநிலத்தை சார்ந்த ராஜாராம் திரிபாதியும் வென்றுள்ளார். இவர்களின் வேளாண் நடைமுறைகள் மற்ற விவசாயிகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் காண்க:

விவசாயிகளால் இலவச ரேஷன் சேவை சாத்தியமாகியுள்ளது- MFOI நிகழ்வில் நிரஞ்சன் ஜோதி பேச்சு

English Summary: Rathnamma bags mahindra Tractors 2023 Winner of Richest Farmer of india Published on: 08 December 2023, 02:08 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.