1. வெற்றிக் கதைகள்

விவசாயத்திலும் விஞ்ஞானி சாதனை

KJ Staff
KJ Staff

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து நெல், கரும்பு, பழப்பயிர்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவைகளை திறம்பட செய்து சாதனை செய்து வருகிறார் சிவகங்கை விஞ்ஞானி (ஓய்வு) கே. ரங்கராஜன்.

 

அவர் கூறியதாவது: சிவகங்கை அருகே சாலூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். கேரள பல்கலைக் கழகத்தில் "மரைன் சயின்ஸ்'சில் முனைவர் பட்டம் பெற்றேன். கொச்சியில், இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் (ஏ. ஆர். எஸ்.,) 1964ல் முதன்மை விஞ்ஞானியானேன். இங்கு 37 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு 2000ல் ஓய்வு பெற்றேன். எனக்கு 78 வயதானாலும் விவசாயத்தை மறக்கக்கூடாது என்ற நோக்கத்தில், அதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

விவசாயத்திலும் சாதனை: 2001ல் நாட்டரசன்கோட்டையில் 28 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கினேன். அதை பண்படுத்தி திருந்திய நெல் சாகுபடி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் கண்டறிந்துள்ள புதிய கரும்பு ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இவை அதிக சர்க்கரை சத்துடன் 8 முதல் 10 அடி உயரம் வரை வளருகின்றன. இந்த ரகங்களின் கரணைகளை உற்பத்தி செய்து கரணை போட்டு மேலக்காடு, திருவேலங்குடி மற்றும் சுற்றுப்புற விவசாயிகளுக்கு வழங்குகிறேன். இது தவிர மாம்பழ விளைச்சலும் நன்றாக உள்ளது. இங்கு 4 பண்ணைக் குட்டைகள் மூலம் மழை நீரை சேமித்து பாசனம் செய்கிறேன். பண்ணைக் குட்டையில் கட்லா, ரோகு, விறால் வகை மீன்களும் வளர்கின்றன. பால் உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்திக்காக பசு மாடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறேன். இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, "பன்முக விவசாயி' ஆனேன், என்றார். பணிக் காலத்தில் விஞ்ஞானியாக இருந்த நான் இப்போது விவசாயத்தில் சாதிக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து "விவசாயத்திலும் விஞ்ஞானி' எனப் பெயர் எடுத்துள்ளேன் என்றார்.

கே. ரங்கராஜன்

விஞ்ஞானி (ஓய்வு)

சாலூர் ,

சிவகங்கை மாவட்டம்.

தொடர்புக்கு: 94427 22928

English Summary: Scientist achievement in agriculture Published on: 18 September 2018, 10:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.