வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 September, 2024 12:37 PM IST
Ramkaran Tiwari

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்கரன் திவாரி என்கிற விவசாயி, தனது 30 ஏக்கர் பண்ணையில், நாற்றாங்கால் முறை மற்றும் திசு வளர்ப்பு போன்ற நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி 4000 குவிண்டால் அளவிற்கு உருளைக்கிழங்கில் மகசூல் பார்ப்பதோடு, 1 கோடி வரை வருமானம் ஈட்டி முன்னோடி விவசாயியாக திகழ்கிறார். வேளாண் துறையில் அவரது வெற்றிப் பாதைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இப்பகுதியில் காணலாம்.

சிவம் சீட்ஸ் என்று பெயரிடப்பட்ட பண்ணையின் உரிமையாளர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்கரன் திவாரி என்கிற விவசாயி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியில் மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இவரது செயல்பாடுகள் உள்ளது.

விவசாயம் என் இரத்தத்தில் உள்ளது: ராம்கரன்

ராம்கரன் திவாரி 2015 ஆம் ஆண்டு முதல் உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவைச் சேர்ந்த ராம்கரன், விவசாய குடும்ப பின்னணியை கொண்டவர். விவசாயத்தை சரியாகச் செய்தால், அதில் அதிக லாபம் பெறலாம் என்பதை நிரூபிக்க விரும்பினார். இதுக்குறித்து ராம்கரன் கூறுகையில், "விவசாயம் என் இரத்தத்தில் உள்ளது. விவசாயம் ஒரு வாழ்க்கை முறை என்பதை விட அது ஒரு வணிகமாக இருக்கலாம், பெருமை மற்றும் செழிப்பு அடைவதற்கான ஆதாரமாக இருக்கலாம் என்பதை எப்போதும் நம்பினேன்" என குறிப்பிட்டார்.

ராம்கரனின் வெற்றிப் பயணம் எளிதான ஒன்றல்ல. பல விவசாயிகளைப் போலவே, அவரும் வழக்கமான சவால்களை எதிர்கொண்டார் - காலநிலை மாற்றம், ஏற்ற இறக்கமான சந்தை விலைகள் மற்றும் தேவைகளைச் சந்திக்கும் அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய அழுத்தம் என்பது போன்று. ஆனாலும், பெரிய அளவில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால், புதுமைகளைச் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.

திருப்பத்தை உண்டாக்கிய CPRI:

சிம்லாவில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Potato Research Institute-CPRI) நடந்த பயிற்சியில் கலந்து கொண்டது ராம்கரனின் விவசாய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

"CPRI-யில், நான் உருளைக்கிழங்கு சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்திய நாற்றாங்கல் முறை பற்றி கற்றுக்கொண்டேன். இது என் எல்லா வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்தது "என்று ராம்கரன் நினைவு கூர்ந்தார்.

CPRI-யிலிருந்து பெற்ற அறிவு மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) ஆதரவுடன், ராம்கரன் புதிய நுட்பங்களை மட்டும் செயல்படுத்தவில்லை - அவர் ஒரு படி மேலே சென்றார். அவர் தனது பண்ணையில் ஒரு சிறிய திசு வளர்ப்பு ஆய்வகத்தை கட்டினார். இவை உயர்தர உருளைக்கிழங்கு விதைகளை உற்பத்தி செய்ய காரணமாக இருந்தது. இந்த முதலீடு அதிக மகசூல் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் விரும்பும் தயாரிப்பு ஆகிய இரண்டையும் பெறுவதை உறுதிசெய்தது.

வருமானத்துக்கு வழிவகுத்த விதை பண்ணை:

ராம்கரன் திவாரி தனது மகன் சிவம் திவாரியின் பெயரில் சிவம் விதை பண்ணையை (Shivam Seeds Farm) நடத்தி வருகிறார். அவரது பி.டெக் பொறியாளராகவும், பண்ணையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். தந்தை மகன் என இருவரும் ஒன்றாக, அவர்கள் பாரம்பரிய விவசாய முறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, வேளாண் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பண்ணையில் ஆண்டுக்கு 3,500 முதல் 4,000 குவிண்டால் அளவிற்கு உருளைக்கிழங்கு விளைகிறது. ராம்கரனின் பண்ணையின் தனித்துவம் என்னவென்றால், அவரது பண்ணையின் உருளைக்கிழங்குகள் பல்வேறு இரகங்களை உள்ளடக்கியதாகவும், உயர்தரமும் கொண்டவையாக உள்ளன.

Read also: அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன?

10-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு:

"குஃப்ரி லிமா, குஃப்ரி சங்கம் மற்றும் குஃப்ரி பஹார் (Kufri Lima, Kufri Sangam, and Kufri Bahar) உட்பட பத்துக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு வகைகளை நாங்கள் பயிரிடுகிறோம். ஒவ்வொரு வகையும் கவனமாக பயிரிடப்பட்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான விளைபொருள் கிடைப்பதை உறுதிசெய்கிறோம்" என்று ராம்கரன் பெருமிதத்துடன் கூறினார். ராம்கரன் தனது விளைப்பொருட்களை சமூக ஊடகங்களை பயன்படுத்தியும், ஆன்லைன் வாயிலாகவும் விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

"உருளைக்கிழங்கு வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக பண்ணைக்கு வருகிறார்கள். அவர்கள் எங்கள் விளைபொருட்களின் தரத்தை நம்புகிறார்கள், அவர்களுடன் நாங்கள் வலுவான நட்புறவை வளர்த்துக்கொண்டோம். சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எங்கள் பண்ணை விலை நியாயமானது என்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியும்,” என்று ராம்கரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நாங்கள் உருளைக்கிழங்கை முன்பு மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்தோம், ஆனால் இப்போது நாங்கள் அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம், மேலும் வரும் ஆண்டுகளில் எங்கள் விளைபொருட்களை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய நாங்கள் முயல்வோம்," எனவும் குறிப்பிட்டார் ராம்கரன்.

Ramkaran Tiwari receiving certificate

டிசம்பர் 2023-இல் மறைந்த முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் 110-வது பிறந்தநாளான கிசான் சம்மான் விழாவின் போது உருளைக்கிழங்கு உற்பத்திக்காக மாநில அளவில் மூன்றாவது பரிசினை பெற்றார். 500 கிராம் அளவிலான சிவப்பு உருளைக்கிழங்கு இரக சாகுபடி மேற்கொண்டமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற மாநில பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர் கண்காட்சி நிகழ்வில் சிறப்பு பரிசினை பெற்றுள்ளார் ராம்கரன்.

Read more:

உளிக்கலப்பை கொண்டு உழவு- ஏன் அவசியம் தெரியுமா?

உவர்நீர் இறால் வளர்க்க ரூ.4.80 இலட்சம் வரை மானியம்- விண்ணப்பங்கள் வரவேற்பு!

English Summary: UP farmer Ramkaran Tiwari Harvests 4000 Quintals of Potatoes per year
Published on: 10 September 2024, 12:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now