கிருஷி ஜாக்ரன் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகும் வேளாண்மைப் பத்திரிக்கை ஆகும்.
இது ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி, ஒடியா, தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய 12 மொழிகளில், 22 மாநிலங்களில் 23 பதிப்புகளாக வெளியிடப்படுகிறது.
சுமார் ஒரு கோடி மக்கள் படிக்கின்ற பத்திரிக்கை கிருஷி ஜாக்ரன் என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கிருஷி ஜாக்ரன். காம் என்ற போர்ட்டல் ஆங்கிலம், இந்தி, வங்காளம், மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செயல்படுகிறது. இப்பொழுது தமிழ் மொழியிலும் இந்தப் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போரட்டல்களில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், கால்நடைப் பராமரிப்பு, பண்ணை இயந்திரங்கள் பயன்பாடு, பயிர்சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவியல் ஆலோசனைகள் , சந்தை விலை நிலவரங்கள், வேளாண் நிகழ்வுகள் மற்றும் வேளாண் செய்திகள் ஆகியன நாள்தோறும் வெளியிடப் படுகின்றன.