1. செய்திகள்

மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்

Harishanker R P
Harishanker R P
Over 200 farmers on Tuesday submitted a petition to the District Revenue Officer (DRO) and NH authorities, urging the state government to reconsider its plan to expand the Sathyamangalam Road (NH 948) and explore alternative routes. (Pic credit: Farmers association)

கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை துவங்க அரசு ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த அரசு இதழில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

92 கிலோமீட்டர் தொலைவுக்கு வரக்கூடிய இந்த புறவழி சாலை, 4 வழி பசுமை சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read more: 

ஜார்க்கண்ட் பெண் மீன் வளர்ப்பாளர் கடல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பில் பன்முகப்படுத்துவதன் மூலம் மாதந்தோறும் ரூ.70,000 சம்பாதிக்கிறார்

பல்வேறு வகையான கரிம பயிர்களுடன் அம்ரபாலி மற்றும் தாய் வாழை மாம்பழங்களை பயிரிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அசாம் விவசாயி.

இது கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் துவங்கி அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடையும். சத்தியமங்கலத்திலிருந்து தமிழக-கர்நாடக எல்லை பகுதி அருகே உள்ள ஹாசனூரில் முடிவடையும்.

இந்த திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பெருமளவு கையகப்படுத்த வேண்டியுள்ள நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த திட்டத்தை நடத்த அன்னூர், கோவில்பாளையம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து இன்று நிலம் எடுத்தால் பணிக்கான கோவை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து ஆட்சேபனை கடிதம் வழங்கினர்.

நிலம் கையகப்படுத்தலுக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை பெரும்திரளாக விவசாயிகள் சந்தித்ததினர். அவரிடம், இந்த திட்டத்திற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், இதனால் விவசாயமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கூறி, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர். 

விவசாயிகள், வருவாய் அலுவலரிடம் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பிய நிலையில், இந்த திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதன் மேல் ஆட்சேபனை இருந்தால் அதை எப்போது வேண்டுமானாலும் தரலாம் என கூறினார்.

விவசாயிகள் கூறுகையில், இந்த திட்டம் தொடர்பாக 15 ஆவணங்களை அரசிடம் கேட்டுள்ளோம். அதை அவர்கள் கொடுத்ததிலிருந்து 21 நாட்களில் ஆட்சேபனை எங்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தெரிவித்தனர். இந்தத் திட்டம் பல குடும்பங்களை இடம்பெயரச் செய்யும் என்றும், இதனால் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் என்றும் விவசாயிகள் வாதிடுகின்றனர். "எங்கள் விவசாய நிலம் பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு வருகிறது, அதை இழப்பது எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும். முன்மொழியப்பட்ட சாலை விரிவாக்கத் திட்டம் தென்னை, மா, கொய்யா போன்ற மதிப்புமிக்க இனங்கள் உட்பட நூற்றுக்கணக்கான மரங்களை அழிக்கும்" என்று அன்னூரைச் சேர்ந்த விவசாயி ஆர். பழனிசாமி கூறினார்.

இடப்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் சேதத்தைக் குறைக்கும் மாற்று தீர்வுகளை ஆராயுமாறு ஆர்வலர்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். குடியிருப்பு மற்றும் விவசாய மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகள் வழியாக பைபாஸ் சாலைகளை அமைப்பதும் பரிந்துரைகளில் அடங்கும்

மேலும், இழப்பீட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் போன்ற விவரங்கள் குறித்து NHAI-யிடம் வெளிப்படைத்தன்மையை விவசாயிகள் கோரியுள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் எம். ஷர்மிளா, அவர்களுடனும் NH அதிகாரிகளுடனும் LA பணிகளைச் சரிபார்க்க அந்த இடத்திற்குச் செல்வதாகக் கூறினார்.

Read more:

30 வயது அசாம் விவசாயி, இயற்கை முறைகள் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் கிங் மிளகாய் சாகுபடி செய்து ஆண்டுதோறும் 15 லட்சம் சம்பாதிக்கிறார்.

English Summary: Farmers oppose Sathy Road expansion plan in Coimbatore Published on: 12 March 2025, 01:53 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.