கால்நடை காப்பீடு திட்டம் - Livestock Insurance

Thursday, 20 August 2020 02:49 PM , by: Daisy Rose Mary
Budget

வெள்ளம், சூறாவளி மற்றும் திடீரென்று ஏற்படும் நோய்களால் எதிர்பாராமல் கால்நடைகள் இறப்பதால் அவைகளை வளர்ப்போருக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கக் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு மாதிரி அடிப்படையில் (implemented on a pilot basis) முதலில் 100 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2014 ஆண்டு இந்த திட்டமானது கோவா மாநிலத்தை தவிர நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத் துறை, கால்நடை மற்றும் எருமை இனப்பெருக்கத்திற்கான தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது தமிழகத்திலும் ஆனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது.

காப்பீடு தகுதி - Insurance eligibility

  • நாட்டினம், கலப்பினம், அயலின கறவை மாடுகள் மற்றும் எருமைகள் அன்றைய சந்தை விலைப்படி காப்பீடு செய்யப்படுகின்றன. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை ஒரு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்.

  • இரண்டரை வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகள்

  • ஒன்று முதல் மூன்று வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது.

காப்பீடு மானிய விதிமுறைகள - Terms & Conditions

  • வறுமை கோட்டிற்குக் கீழுள்ள கால்நடை வளர்ப்போர்க்கு 70% மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்போர்க்கு 50% மானியமும் வழங்கப்படும்.

  • ஓராண்டு காப்பீடு கட்டணமாகக் கால்நடையின் மதிப்பில் 2% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • அதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்குக் காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

  • ரூபாய் 35ஆயிரத்துக்கும் மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்புக்கான காப்பீடு கட்டணத்தைக் கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்

  • ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.

கால்நடைகளை அடையாளம் காணுதல் - dentification of insured animal

கால்நடைகள் காப்பீடு செய்யப்படும் போது, கால்நடையைச் சரியாக அடையாளம் காண வேண்டியது அவசியம். இதற்கு காதிற்கு டேக் (ear tagging)  இடுவது சரியாக இருக்க வேண்டும். வழக்கமான முறையில் காதில் டேக் இடுதல் அல்லது மைக்ரோசிப் (fixing microchips) இடுதல் ஆகியவற்றில் ஒன்றைக் காப்பீடு திட்டத்தை எடுக்கும் போது செய்ய வேண்டும். இதற்கான செலவைக் காப்பீட்டுக் கழகங்கள் ஏற்கும்.

பயனாளர் மாற்றம் - Change of owner during the validity

காப்பீடு காலத்தில் கால்நடைகளை யாரிடமாவது விற்றலோ அல்லது கொடுத்தாலோ பயனாளியின் அடையாளம் மாற்றப்பட வேண்டியது அவசியம். எனவே காப்பீடு பெற விண்ணப்பிக்கும் முன் இதற்கான விதிமுறைகளை முடித்திருக்கவேண்டும்

காப்பீடு செய்யும் முறை - How to insure 

இந்த திட்டத்தில் இணைய பயனாளிகள் அவர்களின் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி காப்பீடு செய்யலாம் அல்லது காப்பீடு முகவர்களை அணுகலாம்

காப்பீடு தொகை பெறும் காலம் - Settlement of Claims

காப்பீடு நிறுவனத்தின் முதல் தகவல் அறிக்கை, பாலிசி ஆவணம், பிரேதப் பரிசோதனை அறிக்கை , இழப்பீடு கோரும் படிவம் உள்ளிட்டவை அடிப்படையில் காப்பீடு தொகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்கும். உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யும் பட்சத்தில் 15 நாட்களில் காப்பீடு தொகை பெறலாம்.

இது தொடர்பான சந்தேகங்களுக்குக் கால்நடை மருந்தகங்களை அணுகலாம்

Livestock Insurance கால்நடை காப்பீடு திட்டம்
English Summary: Livestock Insurance

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.