தடுக்கப்பட்ட விதைப்பு

Thursday, 20 August 2020 09:20 PM , by: Daisy Rose Mary

எதிர்பாராத இயற்கை காரணங்களால் விளைநிலங்களில் விதை நடவு செய்ய முடியாமல் போகும்போது ஏற்படும் இழப்புகளுக்கும் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் ஆதரவு நிதி கிடைக்க வழிவகை செய்கிறது.

காப்பீட்டு நோக்கங்கள் - Purpose of crop Insurance

இயற்கைச் சீற்றங்கள் (Natural Disaster) , பூச்சிகள் (insects) மற்றும் நோய்களின் (Disease) விளைவாக பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவுகளுக்கு விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி ஆதரவு வழங்குதல். நவீன வேளாண்மை செய்முறைகள், உயர் மதிப்பு உள்ளீட்டுகள், உயர் மதிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்துதல். குறிப்பாக பேரழிவு காலங்களில் பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல் போன்றவையாகும்.

தடுக்கப்பட்ட விதைப்பு - Preventive sowing

தடுக்கப்பட்ட விதைப்பு என்பது காப்பீடுக்கு கீழ் வரும் பயிர் முறையான உபகரனங்கள், உரம், விதை உள்ளிட்டவை வாங்க பெற்று விதைப்பு காலத்தின் போது கடுமையான வறட்சி அல்லது எதிர்பாராத கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களால் விதைப்பு செய்ய முடியாமல் போனால் அதற்கான இழப்பை கோரும் வகையில் பிதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை - How to apply 

பயிர் காப்பீடு (Crop insurance) செய்துள்ள விவசாயிகள், முறையான காரணங்களால் விதைப்பு தடுக்கப்பட்டால் இதற்கான தகவலை அந்த பகுதியின் வேளாண்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும். இதைத்தொடர்ந்து, விதைப்பு தடுப்புக்கான காரணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முறையான அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்குவர்.

அந்த அறிக்கையில், விவசாயிகளின் விளைச்சல் பாதிப்பு, நடவுப் பொருட்களுக்கான சேதம், இழப்பீடு மதிப்பு போன்ற அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர், காப்பீடு பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பின், விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் இருந்து 25 சதம் இழப்பீடாக வழங்க வழிவகை செய்யப்படும்.

எதற்கு இழப்பீடு கோரலாம்? - In which Compensation can be claimed

விதை, உரம் என அனைத்தும் வாங்கப்பெற்று விதைப்பு செய்யமுடியாத விவசாயிகளைப் போன்று, வயலில் அறுவடை செய்த பிறகு விளைபொருட்கள் வெள்ளத்தினால் அல்லது அதிக மழையினால் சேதமடைந்திருந்தால் அதற்கும் இழப்பீடு கோரலாம்.

மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பயிர் பாதிக்கப்பட்டால் அதற்கும் இழப்பீட்டுத் தொகை கோர காப்பீடு திட்டங்களில் வழிவகை உள்ளது.
எனவே விதைக்க முடியாத சூழ்நிலை, சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் ஏற்படும் இழப்பு அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, பகுதி சார்ந்த இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பு எனப் பல்வேறு இழப்புகளுக்கும் இழப்பீடு பெற காப்பீடு திட்டங்களில் வழிவகை உள்ளது.

தடுக்கப்பட்ட விதைப்பு Preventive sowing பயிர் காப்பீடு
English Summary: Preventive sowing

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.