கால்நடைகளுக்கு நம் வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். தகுந்த நேரத்தில் சிறந்த சிகிச்சையும் கவனிப்பும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கியிருக்கிறது மகாராஷ்டிர அரசு.
மகா பசுதன் சஞ்ஜீவனி யோஜனா (Maha Pashudhan Sanjeevani Yojana) என்ற திட்டத்தின் கீழ் இந்த சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக மகாராஷ்டிரா அரசு, Bharat Financial Inclusion Limited (BFIL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு வீடுகளில் வைத்தே சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கட்டணமில்லாத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொண்டாலே போதும். உடனடியாக மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பர். இதற்காக 1962 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் வரும் ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
முதற்கட்டமாக மகாராஷ்டிராவின் 31 மாவட்டங்களைச் சேர்ந்த 81 தாலுக்காகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும் செயல்படுத்துமா?
இத்தகை சிறந்த திட்டங்களை தமிழக அரசும் செயல்படுத்துமா? என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!