1. கால்நடை

மாடுகளில் பெரியம்மை நோய் - இயற்கை மருந்து மூலம் குணமாக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cattle blight can be cured with natural medicine!

மாடுகளைத் தாக்கும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக விளங்குவது பெரியம்மை (LUMPY SKIN DISEASE). இதனால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் மாடுகளை பின்வரும் வாழ்வழியாக வழங்கக்கூடிய இயற்கையான மருந்துகள் மூலமே மிக விரைவாக குணப்படுத்த முடியும்.

முதல் மருத்துவம்

தேவைப்படும் பொருட்கள்
(ஒருமுறை கொடுக்க )

வெற்றிலை     -10 எண்ணிக்கை
மிளகு              - 10 கிராம்
உப்பு               - 10 கிராம்
வெல்லம்          - தேவையான அளவு

செய்முறை

  • மேற்கூறியவற்றை அரைத்து மெல்லம் கலந்து சிறிது சிறிது நாக்கி தடவிக் கொடுக்க வேண்டும்.

  • முதல் நாள் - முன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

  • 2ம் நாளில் இருந்து ஒரு நாளைக்கு 3 முறை வீதம், சுமார் இரண்டு வாரங்கள் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது மருத்துவம்

தேவையான பொருட்கள்
(ஒரு வேளை மருந்திற்கு )

பூண்டு                 - 2 பல்
கொத்தமல்லி       - 10 கிராம்
சீரகம்                   - 10 கிம்
துளசி                    - ஒரு கைப்பிடி
இலவங்கம்            - 10 கிராம்
மிளகு                     - 10 கிராம்
வெற்றிலை             - 5 எண்ணிக்கை
சி.வெங்காயம்        - 2 எண்ணிக்கை
மஞ்சன் தூள்           - 10 கிராம்
நிலவேம்பு இலைத்தூள் - 10 கிராம்
திருநீற்று பச்சிலை    - 10 கிராம்
வேப்ப இலை             - ஒரு கைப்பிடி
வில்வம் இலை            - ஒரு கைப்பிடி
வெல்லம்                    - 100கிராம்

  • இவை அனைத்தையும் அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து சிறிது, சிறிதாக நாக்கில் தடவிக் கொடுக்கவும்.

  • முதல் நாள் - முன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்

  • 2ம் நாளில் இருந்து காலை மற்றும் மாலையில் இரண்டு வேளை,தொடர்ந்து கொடுக்கவும். நோய் சரியாகும் வரை கொடுத்து வருவது நல்ல பலனைத் தரும்.

தகவல்
சித்தர் ஐந்திணை பெருவாழ்வு ஆய்வு மையம்
தஞ்சாவூர்

மேலும் படிக்க...

கால்சியம் சத்து குறைபாட்டில் இருந்து மாடுகளை பாதுகாப்பது எப்படி?

கோழித் தீவனத்தில் நச்சுத்தடுப்பு மருந்து சேர்ப்பது அவசியம்!

அழகுக்கு அரிசித் தண்ணீர்! நம்ப முடிகிறதா?

English Summary: Cattle blight can be cured with natural medicine! Published on: 16 November 2020, 08:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.