Krishi Jagran Tamil
Menu Close Menu

உங்களுக்கு மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவம் பற்றி தெரிய வேண்டுமா? அப்படியென்றால் இதோ உங்களுக்காக

Tuesday, 23 July 2019 05:50 PM
COW

மனிதர்களாகிய நாம் மட்டும் இயற்கையை நோக்கி பயணித்தால் போதுமா? நம்மை சார்த்த உயிரினங்களையும் ரசாயணம் இல்லாத ஆரோக்கியமான சூழலுக்கு மாற்ற வேண்டும். குறிப்பாக கால்நடைகள், பறவைகள் போன்றவற்றிற்கு ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என பரிந்துரைக்கிறார்கள்.

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி கூறும் போது கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் போன்ற நோய்களை சரிப்படுத்தலாம் என கூறியுள்ளார்.

மடிவீக்க நோய்

கறவை மாடுகளுக்கு ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது மடிவீக்க நோய். இது பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மடியானது சற்று வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் சூடு அதிகரித்தும் காணப்படும். இதன் காரணமாக பாலானது திரிந்து வெள்ளை நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ அல்லது ரத்தம் கலந்தோ காணப்படும்.

இவ்வகை நோய்க்கு எளிய மருந்தினை பரிந்துரைக்கிறார்கள். மூலிகை மருந்து தயாரிக்கத் தேவையான பொருட்கள் (ஒரு மாட்டிற்கு)

சோற்றுக் கற்றாழை - 250 கிராம்
மஞ்சள் பொடி - 50 கிராம்   
சுண்ணாம்பு - 15 கிராம்

மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும்  ஆட்டுக்கலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டுக் கரைத்து, நீர்த்த நிலையில்  கறவையின் மடிப்பகுதியில்  முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். அதற்கு முன்பு  மடியினை நன்கு கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 5 நாட்கள், தினமும் 10 முறை மடிவீக்கம் குறையும் வரை பூச வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாக மருந்து தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

Cow Dung

வயிறு உப்புசம்

 தீவன மாறுபாடுகளால் கால்நடைகளுக்கும் சில நேரங்களில் வயிறு உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு, ஈரமான பசுந்தீவனங்களை உண்பதால் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய எளிய மருந்து (ஒரு மாட்டுக்கு)

வெற்றிலை - 10 எண்ணிக்கை
 பூண்டு - 5 பல்
பிரண்டை -  10 எண்ணிக்கை
மிளகு  - 10 எண்ணிக்கை
 வெங்காயம் -  5 பல்
சின்னசீரகம் -  10 கிராம்
இஞ்சி -  100 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்

சின்னசீரகம், மிளகை இவ்விரண்டையும் இடித்து, பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து அக்கலவையை 100 கிராம் பனை வெல்லம்  கலந்து  சிறுசிறு உருண்டைகளாக பிரித்து, கல் உப்பு தொட்டு மாட்டினுடைய நாக்கின் மேல் அழுத்தமாகத் தடவி, ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

Herbal Medicine

கழிச்சல்

நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். இவ்வாறு கழிச்சல் ஏற்படும் போது  உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள்,  மாடுகள் மிகவும் சோர்ந்து காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய பின்வரும் சூரணத்தை செய்து தர வேண்டும்.  (ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு)

சின்ன சீரகம் - 10 கிராம்
கசகசா - 10 கிராம்
வெந்தயம் -10 கிராம்
மிளகு - 5 எண்ணிக்கை
மஞ்சள் - 5 கிராம்
பெருங்காயம் - 5 கிராம்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - 10 இலை
பனைவெல்லம் - 100 கிராம்

நன்கு வறுத்து அறிய பிறகு சிறிது சிறிதாக நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த  இரண்டு  கலவைகளையும்  சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

பேராசிரியர் ந.புண்ணியகோடி அவ்வப்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்புக் கால்நடை முகாம்களில் கலந்து கொண்டு முதல் உதவி மூலிகை மருத்துவம் குறித்து தொடர்ந்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு விளக்கி வருகிறார்.

நன்றி
தினமணி

Anitha Jegadeesan
Krishi Jagran

Herbal Medicines For Livestock Ayurvethic Plants Digestion Problem Cow Dung Prof. Punniyakodi Veterinary College Farmers Training
English Summary: Do You Know How To Prepare Traditional Herbal Medicine For Livestock

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. PM Kisan FPO : விவசாய அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன்!
  2. 100% மானியத்தில் அசில் ரக கோழிகள் -விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கெடு!
  3. அக்டோபர் 5ம் தேதி ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி! TNAU ஏற்பாடு!
  4. மானாவாரி பயிர்கள் வறட்சியை தாங்கி வளர என்ன யுக்தியைக் கையாள்வது? எளிய நுட்பங்கள்!
  5. வேளாண் பணிகள் தொடக்கம்!. விதைநெல்லை இருப்பு வைக்க சிவகங்கை விவசாயிகள் கோரிக்கை!
  6. இன்று சிறு பகுதி... நாளை பெரும் பகுதி... சோலார் மின்சாரம் மூலம் வளம் பெரும் விவசாயம்!
  7. வீட்டுத் தோட்டத்தில் அதிக மகசூல் பெற எளிய யுக்திகள்!
  8. விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!
  9. நிலக்கடலையில் கந்தக, சுண்ணாம்புச்சத்தை அதிகரிக்கும் வழிகளை அறிவோம்!
  10. 200 மெ.டன் உளுந்து கொள்முதல்- முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு !

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.