1. கால்நடை

வைக்கோல் விலை உயர்வு- கால்நடை வளர்ப்போர் பாதிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rising straw prices- Impact on livestock breeders

Credit : Twitter

உலர் தீவன தட்டுப்பாடு காரணமாக, பிற மாவட்டங்களில் இருந்து வைக்கோலை, அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை கால்நடை வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ளது.

கறவை மாடுகள் (Dairy cows)

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக, அதிகளவு கறவை மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.

தீவனம் (Fodder)

கால்நடைகளுக்கு, சரிவிகிதமாக, பசுந்தீவனம், உலர் தீவனம் வழங்குவது அவசியமாகும்.

பசுந்தீவனத்துக்குத் தட்டுப்பாடு (Shortage of green fodder)

  • தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு, தரிசு நிலங்கள் பசுமைக்கு மாறியுள்ளதால், பசுந்தீவனத்துக்குத் தட்டுப்பாடு குறைந்துள்ளது.

  • இதன் காரணமாக, வைக்கோல், மக்காச்சோள தட்டு உட்பட உலர் தீவனங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  • வழக்கமாக, உடுமலை பகுதி கால்நடை வளர்ப்போர், அமராவதி அணை பாசன பகுதிகள் மற்றும் பழநி உட்பட பகுதிகளில் இருந்து வைக்கோல் வாங்கி வருவது வழக்கம்.

வைக்கோல் கிடைப்பதில்லை (Straw is not available)

ஆனால், தேவைக்கேற்ப இப்பகுதியில், வைக்கோல் கிடைப்பதில்லை. எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து, வைக்கோல் கட்டுகளை வாங்கி வந்து பயன் படுத்துகின்றனர்.தற்போது, கும்பகோணம் சுற்றுப்பகுதியிலிருந்து, வைக்கோல், கட்டு, ஒன்று, ரூ.220க்கு வாங்கி வருகின்றனர்.

விலை அதிகரிப்பு (Price increase)

இது குறித்து கால்நடை வளர்ப்போர் கூறுகையில், கால்நடைகளுக்கு தேவையான உலர் தீவனம் மற்றும் புண்ணாக்கு ஆகிய வற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீசன் சமயங்களில், பிற மாவட்டங்களில், இருந்து உலர் தீவனத்தை, கூட்டாக இணைந்து வாங்கி வருகிறோம்.

இருப்பு வைத்து விற்பனை (Keep stock and sell)

வியாபாரிகளும், டெல்டா மாவட்டங் களில் இருந்து, உடுமலை, பொள்ளாச்சி உட்பட பகுதிகளுக்கு, வைக்கோலைக் கொண்டு வந்து இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர்.
இது போன்ற காரணங்களால் கால்நடை வளர்ப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கால்நடைத்துறை சார்பில், மானிய விலையில், உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க....

கால்நடை தொழிலை விரிவாக்கம் செய்ய மானியம்! - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Rising straw prices- Impact on livestock breeders

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.