Krishi Jagran Tamil
Menu Close Menu

கறவை மாடுகளை வளர்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான கையேடு...

Thursday, 20 June 2019 12:35 PM
indian Breed

கறவை மாடு வளர்ப்பு

நம் நாட்டில் பசு என்பது வணங்குவதற்கும், போற்றுதலுக்கு உரியதாகவும் உள்ளது. இந்தியாவில்  உழவும், காலநடை வளர்ப்பும் மிக முக்கியமான தொழிலாகும். ஒரு நாட்டின் தன்னிறைவு என்பது உற்பத்தியாகும் உணவு தானியமும், பாலும் வைத்து கணக்கிட படுகிறது. பால் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்ற உணவாகும். கறவை மாடு வளர்ப்பு என்பது வேளாண் துணைத்தொழில்களில் முக்கியமானது. மாடு வளர்ப்பு என்பது  நல்ல லாபம் தரக்கூடிய தொழில்தான் என்றாலும் முறையாக கையாண்டால் மட்டுமே லாபத்தை பார்க்க இயலும்.

பசு வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்

 • பசுவின் பால், தயிர், நெய்,வெண்ணெய் போன்ற பொருட்களை சந்தை படுத்தலாம். 
 • பசுவின்சாணம் உரமாகவும், எருவாகவும் பயன் படுகிறது.
 • பஞகவ்யம் எனும் உயிர்சத்து நிறைந்த உரம் தயாரிக்க பயன்படுகிறது. இதன் மூலப்பொருள் பசுவின்சாணம், தயிர்,பால், நெய், கோமேயம் போன்ற பொருட்களை கொண்டு பஞகவ்யம் தயாரிக்க படுகிறது. 

கால்நடை வளர்ப்பில் கறவை மாடு வளர்ப்பு என்பது ஆண்டு முழுவதும் சுயவேலைவாய்ப்பு அளிப்பதுடன் நிலையான வருவாய்யினை  ஈட்டிக்கொடுக்கிறது. ஆரோக்கியமான கன்றுகளை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான பசுக்களை நாம் உருவாக்கலாம். எனவே நாம் கறவை மாடுகளை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும். கறவை மாடுகளை வாங்கும் போது சந்தைகள், வீடுகள், தரகர்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

cute calf

எவ்வாறு கறவை கலப்பினங்களை தேர்தெடுப்பது? 

பொதுவாக கலப்பின பசுக்களை தேர்தெடுக்கும் போது எந்த இனமாக இருந்தாலும் இளவயது மாடுகளை வாங்குவதே நமக்கு லாபகரமாக இருக்கும்.கலப்பினங்களில் ஜெர்சி பசுக்கள், வடநாட்டைச் சேர்ந்த கறவை இனங்களான கிர், சாகிவால் தார்பார்கள் போன்ற இனங்களை தேர்தெடுப்பது சரியாக இருக்கும். சினை மாடுகள்,  முதல் அல்லது இரண்டாவது ஈற்று மாடுகளை வாங்குவது சிறந்தது. மாடுகள் வாங்கும் போது நாம்    ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மாடுகளின் நாசிகளுக்கு நடுவே உள்ள கறுப்பு பகுதி ஈரமாக இருக்க வேண்டும்.இது சீரான சுவாசத்தை உறுதி செய்யும். எப்போதும் அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதன் தோல்களை தொட்டு பார்க்கும் போது மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருத்தல்  வேண்டும். அதே போன்று நாம் கவனிக்க வேண்டிய மற்றொன்று, அதன்  சாணம், சிறுநீர் போன்றவை மாட்டின் ஆரோக்கியத்தை தெரிவிப்பது ஆகும். அதன் சாணம், ரத்தம், சீதம் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தாலோ அல்லது சிறுநீர் நிறமற்று சிவப்பு நிறமாக இருந்தாலோ, மாட்டின் ரோமங்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருந்தாலோ அது நோயின் அறிகுறியாகும்.

healthy cow

பால் மடியில் கவனிக்க வேண்டியவை

கறவை மாடுகளில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொன்று அதன் பால்மடி. பொதுவாக ஆரோக்கியமான, இளவயதுடைய கறவை மாடுகளின் பால்மடி என்பது உடலோடு ஒட்டி பொருந்தி இருக்க வேண்டும். காயங்கள், கொப்புளங்கள் ஏதுமின்றி மடி மிருதுவாக இருக்க வேண்டும். அதன் நான்கு காம்புகளும் சீராக சதுர வடிவில் உள்ளது போல் இருக்க வேண்டும். பால்கறக்கும் போது காம்புகளில் எந்தவித அடைப்புகள்  இல்லாமல்  காம்புத் துவாரம் நன்றாக இருந்தால்தான் பால் கறக்கும் போது சீராக வரும். மடிக்குச் செல்லும் இரத்த நாளங்கள் பார்க்கும் போது  நன்கு புடைத்துக் காணப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கறவை மாடு வாங்கும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சால சிறந்தது.

Tent

மாட்டுக்கொட்டகை  அமைக்கும் முறை

மாட்டுக்கொட்டகை அமைப்பதற்கு என்று பிரத்யேகமாக எந்த வரையறையும் இல்லை எனலாம். பொதுவாக வீடுகளில் வளர்க்க படும் கறவை இனங்கள் வீட்டிற்கு வெளியிலோ, அல்லது மரத்தடி நிழலிலோ கட்டி வைப்பார்கள். இது வீடுகளில் வளர்க்கும் பசுக்களுக்கு போதுமானது.

பசுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் பனை, தென்னை ஓலை மூங்கில் கொண்டு அமைக்கலாம் அல்லது செங்கல், சிமிண்ட், ஆஸ்பெஸ்டாஸ் அலுமினியம் கூரையுடன் கூடிய கட்டிடமாகவும் அமைக்கலாம். கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வெயில் நேரடியாக உள்ளே வராமல் இருக்கும். கொட்டகையைச் சுற்றி மாடுகள் காலாற உலாவர திறந்தவெளிபரப்பு இருத்தல் நன்று. கூரையின் குறைந்தபட்ச உயரம் 220 செ.மீ. இருந்தால் போதுமானது ஆகும்.

Food Management

சரிவிகித உணவின் அவசியம்

சரிவிகித உணவு, சிறந்த பராமரிப்பு ஆகியன  மிக முக்கியமானதாகும். பொதுவாக கலப்பின கிடாரிக் கன்றுகளை நாம் சரியாக கவனித்தோம் என்றால் 12 முதல் 18 மாத வயதில் சுமார் 200 கிலோ உடல் எடையை அடைந்து பருவ வயதை எட்டிவிடும். இரண்டு வயதிற்குள் கன்றுகள் சுமார் 200 கிலோ வந்த பின்பு சரியான தருணத்தில் இனப்பெருக்கம் செய்தால் அது மூன்று வயதிற்குள் முதல் கன்றை ஈனும். ஏதேனும் காரணங்களால் இந்த கால இடைவெளி தள்ளிப்போனால் அவ்வளவு நாட்கள் கன்று பிறப்பு தள்ளிப்போகும். இதனால் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.

அடர்தீவன மேலாண்மை

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனம்  அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிததிலும்  இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் தீவனமாகவும் விலை மலிவாகவும் இருத்தல் அனைவர்க்கும் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம்.

அடர்தீவனம் தயாரிக்கும் முறை

 • தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம்),
 • புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ (கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு),
 • தவிடு வகைகள் - 37 கிலோ (அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு),
 • தாது உப்புக்கள் - 2 கிலோ (அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும்),
 • சாதாரண உப்பு – 1 கிலோ (சாப்பாடு உப்பு).

பசுந்தீவனம் உற்பத்தி

பசுந்தீவனத்தை நாமே உற்பத்தி செய்வதன் மூலம் அதிகப்படியான செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். அதுமட்டுமல்லாது  பசுந்தீவனம் அதிக நார் சத்து மற்றும் புரதசத்து கொண்டுள்ளது.  பல்லாண்டு தீவனப்புல் வகை – கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். தானியப்பயிர்கள் - தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள் - சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா.

komari

நோய் தொற்றுலிருந்து பாதுகாக்க 

பொதுவாக மாடுகளை  தாக்கும் நோய்களும் அதன் சிகிசைகளும் கீழே கொடுக்க பட்டுள்ளது.

கோமாரி நோய்  - முதலில் 4 மாத வயதில் பின்பு 6 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்.

சப்பை -  முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி வேண்டும்.

தொண்டை அடைப்பான் - முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம்.

அடைப்பான் - முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். (நோயுள்ள பகுதிகளில் மட்டுமே இத்தடுப்பூசி போட வேண்டும்).

cattle breeds in india

நாட்டு மாடு வகைகள்

அத்தக்

கருப்பன்

 காரிக்

காளை

 படப்பு

பிடுங்கி

செம்மறைக்

காளை

வெள்ளைப்போரான்

அழுக்கு

மறையன்

காற்

சிலம்பன்

 படலைக்

கொம்பன்

செவலை

எருது

மயிலைக்

காளை

அணறிகாலன்

காராம்பசு

பட்டிக்

காளை

செம்ம(ப)றையன்

வெள்ளை

ஆளை

வெறிச்சான்

குட்டை

செவி ன்

 பனங்காய்

மயிலை

செந்தாழ வயிரன்

கழுத்திக பிள்ளை

ஆனைச்சொறியன்

குண்டுக்

கண்ணன்

பசுங்

கழுத்தான்

சொறியன்

கருக்

கா யிலை

கட்டைக்

காளை

குட்டை

நரம்பன்

பால்

வெள்ளை

தளப்பன்

பணங்காரி

கருமறையன்

குத்துக்

குளம்பன்

பொட்டைக்

கண்ணன்

தல்லயன் காளை

சந்தனப்

பிள்ளை

கட்டைக்காரி

 குட்டை செவியன்

போருக்

காளை

தறிகொம்பன்

சிந்துமாடு

கட்டுக்

கொம்பன்

குள்ளச்

சிவப்பன்

மட்டைக் கொலம்பன்

துடைசேர்

கூழை

செம்

பூத்துக்காரி

கட்டைவால் கூளை

 கூழை

வாலன்

மஞ்சள்

வாலன்

தூங்கச்

செழியன்

செவலமாடு

கருமறைக்

காளை

கூடுகொம்ன்

மறைச்

சிவலை

வட்டப்புல்லை

பொங்கு

வாயன்

கண்ணன் மயிலை

கூழைசிவலை

மஞ்சலி

வாலன்

வட்டச்

செவியன்

சர்ச்சி

கத்திக்

கொம்பன்

கொட்டைப்

பாக்கன்

மஞ்ச

மயிலை

வளைக்

கொம்பன்

நாட்டுமாடு

கள்ளக்

காளை

கொண்டைத்தலையன்

மயிலை

வள்ளிக் கொம்பன்

 

கள்ளக்

காடன்

ஏரிச்

சுழியன்

மேக

வண்ணன்

வர்ணக்

காளை

 

கட்டைக்கொம்பன்

ஏறுவாலன்

முறிகொம்பன்

வட்டக்

கரியன்

 

கருங்கூழை

நாரைக்

கழுத்தன்

முட்டிக்காலன்

வெள்ளைக்

காளை

 

கழற்வாய்வெறியன்

நெட்டைக்கொம்பன்

முரிகாளை

வெள்ளைக்

குடும்பன்

 

கழற்சிக்

கண்ணன்

நெட்டைக்

காலன்

சங்கு

வண்ணன்

வெள்ளைக்

கண்ணன்

 

 

அரசால் அங்கீகரிக்க பட்ட கலப்பினங்கள்  

அமிர்தமஹால்

 

கென்கதா

 

ரத்தி

 

காரியர்

 

பச்சூர்

 

கெரிகர்

 

ரெட் காந்தாரி

 

புலிக்குளம்

 

பர்க்கர்

 

கிலர்

 

ரெட் சிந்தி

 

கோஷாலி

 

டாங்கி

கிருஷ்ணா வெலி

சாஹிவால்

மல்நாட்கிடா

 

டெயோனி

 

மால்வி

 

சிரி

 

பெலஹி

 

கயலோ

 

மேவாட்டி

 

தர்பார்கர்

 

கங்காட்டிரி

 

கிர்

 

நேகோரி

 

உம்பளச்சேரி

 

பாட்ரி 

 

கள்ளிகர்

 

நிமரி

 

வெச்சூர்

 

லட்சுமி

 

ஹரியானா

 

ஓங்கோலே

 

மோட்டு

 

லாடக்ஹ்ய

 

காங்கயம்

பொன்வர்

குமுஸரி

கொன்கான் கபில 

 

கண்கேர்ஜ்

 

புங்கனுர்

 

பிஞ்சர்புரி

 

 

கறவை மாடு வளர்ப்பு Cattle Farm Livestock Farming Breeds Guidelines Start Cattle Farm Indian Breeds NBAGA National Bureau Genetic Resource
English Summary: Do You Want To Start Cattle Farm? Do you Know How Many Breeds Are In India? Here Are Guidelines Cattle Farm

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!
 2. காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு திட்டம்!!
 3. வெறும் 12 ரூபாயில், ரூ.2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு பெற விருப்பமா? - விபரம் உள்ளே!
 4. கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!
 5. ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் - மானாவாரி விவசாயிகளுக்கு அழைப்பு!
 6. ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!
 7. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு - வானிலை மையம்!!
 8. மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் - வெளியீடு இன்று தொடங்குகிறது!
 9. மண்பாண்டங்களின் மகத்துவங்கள்!- மனம் திரும்பினால் ஆரோக்கியம் உங்கள் கையில்
 10. 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.