1. கால்நடை

வருமானத்தை அதிகரிக்கலாம்; செம்மறி ஆடு வளர்ப்பு

KJ Staff
KJ Staff

கோழிக்கறியை விட மக்கள் ஆட்டுக்கறியையே அதிகம் விரும்புகின்றன. மேலும் கோழியை விட ஆட்டில் தான் அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. ஆட்டுக்கறியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தாலும் மக்கள் விலை பார்க்காமல் ஆட்டுக்கறியை வாங்கத்தான் செய்கிறார்கள். ஆட்டில் கிடைக்கும் வருமானம் கோழியில் அந்த அளவிற்கு கிடைப்பதில்லை.  அதிலும் இந்த செம்மறி ஆடு வளர்ப்பு அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடியது.

இதில் வருமானம் அதிகரிக்குமா? செம்மறி ஆடு வளர்ப்பு

செம்மறி ஆடுகளை வளர்ப்பது மிகவும் எளிதான விஷயம் என்று ஆடு வளர்ப்பவர்கள் கூறுகின்றன. செம்மறி ஆட்டை வெயில், மலை, குளிர், என அனைத்து சூழ்நிலையிலும் வளர்க்கலாம். விரைவாக அதிக வருமானத்தை  ஈட்ட முடியும். இவ்வகை ஆடு வளர்ப்பதற்கு சிறிய இடமும், சிறிய கொட்டகையும் இருந்தால் போதுமானது.

வளர்ப்பதற்கு ஆட்டுகுட்டிகள் வாங்கும் போது கவனத்துடன் பார்த்து வாங்க  வேண்டும். இடைத்தரகர்களை எதிர் பார்க்காமல் நேரடியாக  ஆட்டுக்குட்டிகளை வாங்க வேண்டும். ஆடு வாங்கிய உடன் இன்சூரன்ஸ் செய்துவிடுவது நல்லது. ஓரிரு ஆடுகள் இறந்தாலும் அந்த அளவிற்க்கு நஷ்டம் ஏற்படாது , ஆடு இறந்து விட்டது என்று கால்நடை மருத்துவரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி கொடுத்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைத்து விடும்.

2 ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு நபர் சுமார் 100ஆடுகளை வளர்க்க முடியும். பகல் வேளையில் திறந்த வெளியில் ஆடுகளை மேய விட்டு இரவில் கொட்டகையில் அடைத்து விடலாம். செம்மறி ஆடுகள்  மந்தையாகவே மேய்வதால் அவற்றை பராமரிப்பது மிகவும் எளிதனது. இவற்றில் இருந்து கிடைக்கும் கறி தவிர தோல், பால், எருக்கள் இவற்றில் இருந்தும் வருமானத்தை பெற முடிகிறது.

சிறு குறு விவசாயிகள், விவசாயம் செய்வதோடு கூடுதலாக ஆடுகள் வளர்ப்பிலும் ஈடுபடலாம். இதனால் விவசாயத்தில் ஒரு சில நேரம்  வருமானம் இல்லாவிட்டாலும் ஆடு வளர்ப்பில் வருமானம் இருந்து கொண்டே இருக்கும். நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களும் குறைந்த முதலீட்டில் ஆடுகள் வாங்கி வளர்த்து வருமானம் ஈட்டலாம். 

எந்த தொழிலும் குறைந்தது அல்ல

மேலை நாடுகளில் ஆடுகள் வளர்ப்பதை படித்த இளைஞர்களும்  மற்ற தொழிலை போல இதுவும் ஒரு தொழில் என்ற எண்ணம் கொண்டு ஆடு வளர்ப்பதில் ஈடுபட்டு நிறைய வருமானம் ஈட்டுகிறார்கள்.

நம் நாட்டிலும் இதே போல இளைஞர்கள் எந்த வேலையையும் குறைவாக எண்ணாமல் அதில் இருந்து கிடைக்கும் நன்மையை மாட்டு பார்த்து தொழிலில் வருமானம் ஈட்ட வேண்டும்,  இதுவும் அவர்களுக்கு நன்மையாகவே அமையும்.

English Summary: sheep farming: benefits, simple guidance Published on: 27 April 2019, 12:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.