1. கால்நடை

அலங்கார மீன்கள் வண்ணம் மீன்கள் வளர்ப்பு

KJ Staff
KJ Staff

நம் வீடுகளில், அலுவலகங்களில், பார்த்தவுடன் ஈர்க்க கூடிய இடங்களில் மீன் தொட்டிகள் வைத்து விதவிதமான வண்ண மீன்களை வளர்க்கிறோம். சிலர் அழகுக்காக வளர்கின்றன, சிலர் வாஸ்து ஜோதிட நம்பிக்கையில் வளர்கின்றன.  இந்த அலங்கார  மீன்களில் இரண்டு வகை உண்டு. முட்டை இடுபவை மற்றும்  உள்பொரி முட்டை இடுபவை.

முட்டையிடுபவை

முக்கியமான முட்டையிடும் இனங்களான பார்ப்ஸ் ரெஸ் போரஸ், தங்க மீன், டெட்ராய், டேனியோஸ், பேட்டாஸ், ஏஞ்சல்மீன், கோரமிஸ் போன்றவை உள்ளன.இதில் பர்பஸ் முக்கிய இனமாகும்.இந்தியாவில் ரோஸி பார்ப், அருளி பார்ப், ஸ்ரைப்டு பார்ப் போன்ற பார்ப்ஸ் இனங்கள் காணப்படுகின்றன. அதேபோல் ஜெயின்ட் டேனியோ, முத்து டேனியோ, ஸெப்ரா டேனியோ போன்ற ஜெய்ன்ட் இனங்களும் மெலிந்த ராஸ் போரா, குளோலைட் ராஸ்பெரா மற்றும் சிஸோர்ட்டெயில் போன்றவை முக்கியமானவை. மீன் வளர்ப்பிற்குத் தங்க மீன் மிகவும் ஏற்றது. கோமெட், ஒரண்டா, ரெட்கேப், வொய்ட் டெய்ல், பபுள் ஐ, போன்ற இரகங்கள் இதில் அடங்கும். இம்மீன்கள் 20 செ. மீ நீளும் வரை வளரக் கூடியவை. 6 செ. மீ நீளம் வளர்ந்த உடன் இனப்பெருக்கம் செய்கின்றன.

டெட்ராஸ் என்பவை 3- 8 செ.மீ நீளம் வரை மட்டுமே வளரக்கூடியவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா கறுப்பு விடோ டெட்ரா, ஃபிளேம் டெட்ரா, நியோன் டெட்ரா மற்றும் கார்டினல் டெட்ரா போன்றவை அதிகம் வளர்க்கப்படும் இனங்களாகும். சைமிஸ் ஃபைட்டர் என பரவலாக வழங்கப்படும் பீட்டா ஸ்பிலென்டர்ஸ் பல நிறங்களில் காணப்படுகிறது. பிற ஆண் மீன்களின் முன்பு இம்மீன்கள் பயங்கரமாகக் காணப்படும். கோர்மீன்களில் மூன்று புள்ளி கோர்மி, முத்து கோர்மி, நிலவொளி கோர்மி, பெரிய கோர்மி, மற்றும் முத்தமிடும் கோர்மி போன்றவை முக்கிய இனங்கள்.

உள்பொரிமுட்டையிடுபவை

இதில் வெளிவரும் முட்டையிடும் மீன்களுடன் ஒப்பிடும்போது குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவு இம்முறை இனப் பெருக்கம் சற்று எளிதானது. இதில் குஞ்சுகளின் வளர்ச்சி தாய் மீனின் வயிற்றுக்குள்ளேயே நடைபெற்று 4 வாரங்களுக்குப் பின்பே பிரசவிக்கப்படுகின்றன. கப்பி மீன், கறுப்பு மொல்லி, கத்திவால், பிளாட்டி போன்றவை முக்கிய குஞ்சு பொரிக்கும் இனங்களாகும். சராசரியாக 50 – 100 குஞ்சுகளைப் பிரசவிக்கும் சரியான அளவு உணவு கொடுத்து எல்லா மீன்களுக்கும் முறையாகப் பராமரித்தால் ஒன்றை ஒன்று மீன்களே கொன்று திண்ணுவதைத் (தன் இனத்தைத் தானே உண்ணுவதைத்) தவிர்க்கலாம். மீன்களின் எண்ணிக்கையும் பெருகும்.

முட்டையிடும் மீன்களின் இனப்பெருக்கம்

ஆண், பெண் மீன்களில் தனித்தனி ஹார்மோன் சுரக்கின்றது. முட்டையிடுதலின் போது பெண் மீன்கள் நீரில் முட்டைகளை இடும் அதே நேரம் ஆண் மீன்கள் அம்முட்டையின் அருகே வந்து மீன் விந்தினை வெளியிடுகின்றன. இதன் மூலம் அம்முட்டைகள் தாய் மீனின் உடலுக்கு வெளியில் நீரிலேயே கருவுருகின்றன. அடைகாக்கும் முறையைப் பொறுத்து முட்டையிடும் மீன்கள் 5 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒட்டாத முட்டைகளை தூவு பவை

ஜெப்ரா மீன்கள் (டேனியோ இனத்தைச் சேர்ந்தவை). இடும் முட்டைகள் எங்கும் ஒட்டாமல் நீரில் மிதந்துகொண்டிருக்கும். பிற இனங்களைப் போலவே ஜெப்ரா இனங்களும் தன் முட்டைகளை இட்டபின் தானே உண்ணும் வழக்கமுடையவை. இதன் தற்காப்பு நடவடிக்கையாக அம்முட்டைகளைச் சுற்றி குமிழிகளை விடுகின்றன.

இனப்பெருக்க காலத்தில் ஆண், பெண் மீன்களின் விகிதம் 2:1 அல்லது 3:1 என்றவாறு பராமரிக்கப்பட வேண்டும். ஆண் மீன்களுக்கு 1 நாள் முன்னதாகவே பெண் மீன்களை இனப்பெருக்கத் தொட்டியில் விட வேண்டும். வெப்பநிலை சாதகமாக இருந்தால் முட்டைகள் 2 லிருந்து 3 நாட்களுக்குள் பொரித்து விடும். சின்னஞ்சிறு குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கும்போதே பெரிய மீன்கள் தொட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும். பொரிக்கும் குஞ்சுகள் மஞ்சள் கருவை உறிஞ்ச 2 நாட்கள் தேவைப்படும். பின்பு 4 நாட்கள் வரை நுண்ணுயிரி உணவு அளித்தல் வேண்டும். சக்கரவான நுண்ணுயிரிகளையும், விலங்கின மிதவை உயிரிகளையும் 1 வாரத்திற்குக் கொடுக்கலாம். நாளடைவில் பொடியாக்கப்பட்ட மீன் உணவுகளை அளிக்கலாம்.

ஒட்டும் மிதவை முட்டைகள்

தங்க மீன்கள் (காரிகஸ் இனம்) இனப்பெருக்கப் பண்புகள் தோன்றிய பின்பு ஆண், பெண் மீன்களை 24”x 12” x 15” அளவுடைய வட்டவடிவ தொட்டிகளிலோ, அல்லது இரும்பு சிமெண்ட் தொட்டிகளிலோ (3.5 அடி x 2.5 அடி) விடப்படுகின்றன. இத்தொட்டிகளைப் பயன்படுத்தும் முன்பு 1 பிபிஎம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலால் நன்கு கழுவ வேண்டும். வடிக்கப்பட்ட குளத்து நீருடன் நிலத்தடி நீரையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இனப்பெருக்கத் தொட்டியை இளங்காலை சூரிய வெளிச்சம் மட்டும் சிறிது நேரம் படக்கூடிய மற்ற நேரங்களில் சூரிய ஒளியற்ற இடமாகப் பார்த்து வைக்க வேண்டும். தங்க மீன்களின் முட்டைகள் ஒட்டும் தன்மையுள்ளதால் இவை ஒட்டியிருக்கத் தகுந்தவாறு நீரினுள் மூழ்கியிருக்குமாறு செயற்கை வலைகளையோ ஹைடிரில்லா போன்ற தாவரங்களையோ தொட்டியினுள் வைக்க வேண்டும். வலைகள் நீரின் மேற்புறத்திற்கு சற்று மூழ்கிய நிலையில் வைக்கப்பட வேண்டும். வெப்பநிலை 200 யிலிருந்து 300 செல்சியஸ் வரை பராமரிக்கப்பட வேண்டும்.

முட்டையிடுபவை

பார்ப்ஸ் சிறு மீன்கள், எப்போதும் கூட்டமாகத் திரியும் மீன் இனமான ராஸ்போரா இனத்தைச் சேர்ந்தவை. 250 - 280 செல்சியஸ் வரை இதன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வெப்பநிலை. இதன் இனப்பெருக்கம் சற்று கடின மானதானாலும் பெண் மீன்கள் 250 முட்டைகள் வரை இடும். இது சற்று அமிலத்தன்மையுடைய (அமிலகாரத்தன்மை 5.5) சூழ்நிலையையே விரும்பும் இனப்பெருக்கத்திற்குத் தயாராயுள்ள ஆண், பெண் மீன்களை இனப்பெருக்கத் தொட்டிக்குள் விடவேண்டும். இத்தொட்டியினுள் தட்டையான இலையுடைய தாவரங்களை வைக்க வேண்டும். இந்த இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் முட்டைகளை இட்டபின் பெண் மீன்கள் மெலிந்து காணப்படும். இதை வைத்து முட்டையிடுதல் முடிந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். உடனே பெரிய மீன்களைத் தொட்டியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். முட்டையிட்ட 24 லிருந்து 36 மணி நேரத்திற்குள் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கிவிடும். இக்குஞ்சுகள் 3 – 5 நாட்களுக்குள் நன்கு நீந்தக் கற்றுக் கொண்டு விடும். இவைகளுக்கு நுண்ணுயிரி உணவு அளித்தல் வேண்டும். வளர்ந்த பின்பு விலங்கு மிதவை உயிரினங்களை (மோய்னா மற்றும் டாப்னியா போன்றவை) உணவாகக் கொடுக்கலாம்.

முட்டைகளைப் புதைப்பவை

முட்டையிட்டுப் புதைக்கும் சில மீன் இனங்களில் கில்லி மீன்கள் (அப்லோ செய்லஸ் இனம்) குறிப்பிடத்தக்க ஒன்று. இவை நன்கு அடர்த்தியாகத் தாவரங்களைக் கொண்டுள்ள மீன் தொட்டியினுள் மண்ணில் ஆழமாகச் சென்று முட்டையிடுகின்றன. இம்மீன்கள் நன்கு குதிக்க வல்லவை, ஆகையால் மூடப்பட்ட தொட்டியில் வளர்க்க வேண்டும். மண் உலர்ந்த பிறகும் கூட இம்முட்டைகள் பல வாரங்கள் சில மாதங்கள் வரை வறண்டசூழ்நிலையில் இருக்கும். பின்பு ஈரப்பதம் கிடைத்த உடன் குஞ்சு பொரிக்கக்கூடியவை.

கூடு கட்டுபவை

கோர்மி, சியாமீஸ் பைட்டர் போன்றவை கூடு கட்டி முட்டையிடுபவை. இவ்வகை மீன்கள் தங்கள் முட்டைகளைப் பாதுகாக்க குமிழிகளை கூடாக அமைக்கின்றன. பெரும்பாலும் இக்குமிழிகள் ஆண் மீன்களால் உண்டாக்கப்படுகின்றன.

தகவல் :

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்

English Summary: ornamental and color fish farming Published on: 23 April 2019, 12:51 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.