1. கால்நடை

உலர்புல் தயாரித்தல் மற்றும் அதன் நன்மைகள் யாவை?

Deiva Bindhiya
Deiva Bindhiya
What is the preparation of dry grass and its benefits?

தீவனப்பயிர்கள் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றைச் சேகரித்துப் பதப்படுத்திச் சேமித்து வைப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் கோடை வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குச் சத்துமிக்க தீவனம் வழங்க வழி வகுக்கும். அதற்கான சில வழி முறைகளை, நீங்கள் கீழே காணலாம். அதற்காக நாம், இந்த பதிவில் பார்க்க இருப்பது, உலர்புல் தயாரித்தல் மற்றும் அதன் வகைகள்.

பசும்புல்லில் 60 விழுக்காடு முதல் 90 விழுக்காடு அதிகமாகவும மற்ற தீவனப் பயிர்களில் சற்று குறைவாகவும் அதாவது (60 முதல் 80) விழுக்காடு இருக்கும் என கூறப்படுகிறது. பசுந்தீவனப்பயிர்களில் ஈரப்பதம் அதிகமிருப்பதால் எளிதில் கெட்டுப் போகும் அபாயம் உள்ளது. ஆகவே பசுந்தீவனப்பயிர்களின் ஈரப்பத்தை 10 – 12 விழுக்காடுக்குக் குறைத்து சேமித்து வைக்கவும் வழி உள்ளது. நம் நாட்டில் “வெயிலில் உலர்த்தும் முறை” பெரிதும் காணப்படும், பயன்பாடு ஆகும். பசுந்தீவனங்களை அறுவடை செய்யும் காலங்களில் போதிய சூரிய ஒளி கிடைக்காவிட்டாலும் அல்லது தொடர்ச்சியாக மழை பெய்தாலும் ஈரப்பத்தைக் குறைப்பது கடினமாகிவிடுகிறது. அச்சமயத்தில் பசுந்தீவனங்களை அப்படியே ஊறுகாய் புல்லாக மாற்றிப் பதப்படுத்த மாற்று வழி இருக்கிறது.

உலர்புல் தயாரித்தல் (Dry grass preparation for animals)

தீவனப் பயிர்களை அறுவடை செய்த பின்னும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. இதனால் தீவனப்பயிர்களில் உள்ள சத்துகளின் அளவு குறைகிறது. மேலும் நுண்கிருமிகள் முக்கியமாகப் பூஞ்சை நச்சுகள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன. உலர்புல் தயாரிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியது.

அறுவடை செய்த பின் பசும்புல்லில் உள்ள ஈரப்பதத்தை 10 -15 விழுக்காடு வரும் வரை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் குறைத்திட வேண்டும்.

உலர்புல் தயாரிக்கும் பொது இலைப்பகுதி விரையம் ஆவதையும் குறைக்க வேண்டும். ஏனெனில் இலைப்பகுதியில்தான் தண்டு, வேர்ப்பகுதிகளை விட அதிகச் சத்துகள் இருக்கின்றன.

உலர்புல்லின் வகைகள் எவை

பயறு வகைத் தீவனப்பயிர்களான தட்டைப்பயறு, கொள்ளு, நரிப்பயிறு, சணப்பு, முயல்மசால், குதிரைமசால், சோயா பீன், தக்கைப் பூண்டு மற்றும் நிலக்கடலை போன்றவற்றை வெயிலில் உலரவைத்து உலர்புல் தயாரிக்க பயன்படுத்தலாம். பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களை அதிக வெயிலில், முக்கியமாகக் கோடைக்காலத்தில் பகல்வேளையில் உலர வைக்கும்போது, இலை தழை இழப்பு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. ஆகவே காலை மாலை வேளையில் வெயில் குறைவாக உள்ள போது பயறுவகைத் தீவனங்களைக் கையாள்வது நல்லது. பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களில் புரதம், கால்சியம் சத்து அதிகமாக காணப்படுவது சிறப்பாகும்.

பயறு வகைசாராத் தீவனங்கள்

சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, ஓட்ஸ் போன்ற பயறு வகை சாராத் தீவனப்பயிர்கள் உலர்த்தி உலர்புல் தயாரித்திடலாம்.

கலப்பு வகை உலர்புல்

பயறு வகை மற்றும் பயறு வகை சாராத் தீவனப்பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு இரண்டையும் ஒன்றாக அறுவடை செய்து உலர்புல் தயாரிக்க முடியும். பயறுவகை சாராத் தீவனங்களுடன் பயறு வகைத் தீவனங்களைச் சேர்க்கும் போது சரிவிகிதச் சமச்சீர் தீவனம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பயறு வகைத் தீவனங்களில் புரதசத்து 15 முதல் 25 விழுக்காடு வரை இருக்கும். ஆனால் பயறு வகை சாராத் தீவனங்களில் புரதச் சத்தின் அளவு 5 முதல் 10 விழுக்காடு வரை மட்டுமே இருக்கும்.

உலர்புல் தயாரிக்கும் முறைகள்

நிலத்தில் பரப்பி உலர வைக்க வேண்டும்.

அறுவடை செய்த தீவனப்பயிர்களை நிலத்தில் பரப்பி அவ்வப்போது திருப்பிப்போட்டு வர வேண்டும். பெரும்பாலும் இம்முறையில் உலர்புல் தயாரிக்கப்படு வழக்கமாகும்.

சிறு கத்தைகளாகக் கட்டி உலரவைத்தல்

சோளம், கம்பு, ராகி போன்ற தீவனப்பயிர்கள் அறுவடைக்குப்பின் சிறு கத்தைகளாகக் கட்டி கலர வைத்திடலாம். எனினும் கத்தைகளை அவ்வப்போது திருப்ப வேண்டும், அப்போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு சேர காய்ந்திடும்.

முக்கோணக் கூம்பு வடிவ முறை

சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்களைச் சிறு கத்தைகளாகக் கட்டியபின் கூம்பு வடிவத்தில் நிற்க வைத்து உலர வைக்கலாம். இம்முறையானது மழைக் காலத்தில் பயனள்ளதாக இருக்கும்.

இவ்வாறு, நேரம் இருக்கும் போதே கால்நடைகளை காபாற்ற தீவினங்களை சேமித்திடலாம். கொடைக்காலத்திற்கு முன்பு இதை செய்து பயனடையுங்கள்.

மேலும் படிக்க:

ஜனவரி 31 ஆம் தேதி துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடிப்பர். ஏன்?

ஏர்டெல்லில் முதலீடு செய்யும் கூகுள்: நிறுவனங்களின் இலக்கு என்ன?

English Summary: What is the preparation of dry grass and its benefits? Published on: 31 January 2022, 03:40 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.