Krishi Jagran Tamil
Menu Close Menu

தேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு

Wednesday, 15 January 2020 11:43 AM , by: Anitha Jegadeesan
Honey bees

விவசாயிகளுக்கு அதிக முதலீடு இல்லாமல் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய உபத்தொழில் தேனீ வளர்ப்பு மிக முக்கியமானதாகும்.  இதனால் இன்று பல விவசாயிகள் தேனீ வளர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையம் தேனீ வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தேனீ வளர்ப்பதன் மூலம் விவசாய நிலங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்று வேளாண் உற்பத்தியும் அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக எண்ணெய் வித்து பயிர்களான, எள், சூரியகாந்தி, கடுகு மற்றும் தென்னை, காய்கறி பயிர்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, பூசணி பயிர்கள், பழ வகை பயிர்களில் மா, கொய்யா, மாதுளை, அத்தி, பப்பாளி பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெற தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 810 தேனீ பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பை தொடங்கலாம். பொதுவாக ஒரு பெட்டியில் ராணி தேனீ ஒன்றும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைக்கார தேனீக்களும் காணப்படும். இவற்றின் மூலம் வருடத்திற்கு அதிகபட்சமாக 60 கிலோ தேன் கிடைக்கும்.

Honey bee box in the field

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

 • தேனீக்களின் வகைகள்
 • வாழ்க்கைப் பருவம்
 • வளர்ப்புக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யும் முறை
 • வளர்ப்புக்கு ஏற்ற பூ ரகங்கள்
 • தேவைப்படும் உபகரணங்கள்
 • தேனீக்களின் எதிரிகள் மற்றும் தாக்கும் நோய்கள்
 • கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில் பராமரிப்பு முறை
 • சுத்தத் தேனை அறியும் முறை
 • உயர் ரக ராணித் தேனீக்களை உற்பத்தி செய்யும் முறை
 • செயற்கை முறையில் உணவளித்தல் மற்றும் பொருளாதார கணக்கீடு பற்றிய தொழில்நுட்பங்கள்

தேனீ வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகின்ற 22ம் தேதி காலை, 9:30 மணிக்கு நடை பெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். கட்டணமாக ரூ.290. செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04286 – 266345, 266650 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் தெரிவித்தார்.

Beekeeping Training at Namakkal Krishi Vigyan Kendras in Namakkal Workshop for farmers and public in Taminadu Beekeeping Training in Tamil
English Summary: Beekeeping Training at Namakkal: Krishi Vigyan Kendras arranges workshop for farmers and public

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
 2. பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
 3. நீலகிரியில் கொட்டப்போகிறது அதி கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
 4. கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!
 5. மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!
 6. மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
 7. பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!
 8. விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
 9. மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!
 10. அதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.