1. Blogs

என்ன மரம் வளர்க்கலாம் என்று குழப்பமா? தகவல் தருகிறது புதிய திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
What Tree can be grown

மரம் வளர்ப்பது தொடர்பான தகவல்களை பெற, தமிழக மரக் களஞ்சியம் திட்டம், வனத்துறையால் துவக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வனத் துறை வாயிலாக, மரம் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

துவக்கம்

காலியாக உள்ள, அரசு தரிசு நிலங்களில் பயன் தரும் மரங்களை நட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மரம் வளர்க்க முன்வருவோருக்கு, எங்கு, என்ன மரம் நடுவது என்பதில், சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. இதனால், நிலத்தின் தன்மைக்கு ஒத்துவராத மரங்கள் நடப்படுகின்றன.

இதனால், இத்திட்டத்தின் அடிப்படையை சிதைக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக மரம் வளர்ப்போருக்கு, எளிய முறையில் வழிகாட்ட, தமிழக மரக் களஞ்சியம் திட்டத்தை வனத்துறை (Forest Department) துவக்கி உள்ளது.

விபரம்

இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட வாரியாக, என்னென்ன மரங்களை வளர்க்கலாம் என்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த விபரங்களை, www.tntreepedia.com என்ற இணையதளம் வாயிலாக மக்கள் அறியலாம்.

மேலும், மரங்களின் வகை, வளர்க்கும் வழிமுறை, விதைகள், கன்றுகள் கிடைக்கும் இடங்கள், ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் முகவரி, தொலைபேசி எண் (Contact Number) விபரங்களையும் அறியலாம்.

மேலும் படிக்க

நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறை: விவசாயிகள் எதிர்ப்பு!

350 மாவட்டங்களில் பேரிடர் நண்பர்கள் திட்டம் அறிமுகம்!

English Summary: Confused as to what tree can be grown? New project that brings information! Published on: 01 October 2021, 09:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.