Krishi Jagran Tamil
Menu Close Menu

மேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை!

Friday, 03 July 2020 09:20 AM , by: Elavarse Sivakumar

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்தில், யானை ஒன்று மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கண்டியூர் பீட் என்னும் இடம் உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தில் வியாழக்கிழமை காலை, யானை ஒன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடைந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

சுட்டுக்கொல்லபட்ட யானை (Elephant found shot dead)

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், யானை சுமார் 25 வயது மதிக்கத்தக்கது என்பதும், அதன் இடது காது பகுதியில் காயத்துடன் ரத்தம் வழிந்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், யானை சுட்டுக்கொல்லபட்டதாக (Elephant shot dead) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,போலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டியூர் பீட்டிற்கு அருகே உள்ள சிறுமுகையில் சமீபத்தில் இரண்டு யானைகள், அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது ஒரு யானை சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, வனத்துறையினரிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

வனத்துறையினர் விசாரனை (Forest officials investigate)

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், எதற்காக யானைக் கொல்லப்பட்டது? என்பது குறித்த மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில், வனவிலங்குகளை கொடுமைப்படுத்தும் கும்பல் பதுங்கியுள்ளதா? என்றக் கோணத்திலும், விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது. 

கடந்த மாதம் கேரளாவின் பாலக்காடு பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண் யானை ஒன்று உயிரிழந்தது. பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தினை உண்டதால் யானையின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் உணவு உண்ணாமல் தவித்து வந்த யானை ஒரு ஆற்றில் இறங்கி நின்று கொண்டே உயிரிழந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!

ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!

Elephant Shot dead Elephant attack பெண் யானை சாவு சுட்டுக்கொல்லப்பட்ட யானை Elephant death
English Summary: Elephant Shot dead near Mettupalayam in Tamilnadu

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. பெண்களே வாங்க..! உங்களுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
  2. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்! - போலீசார் விரட்டியடிப்பால் பரபரப்பு!
  3. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
  4. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
  5. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
  6. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!
  7. நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!
  8. தேசிய பால் தினம் 2020 : வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குறித்து தெரியுமா உங்களுக்கு!!
  9. கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்- ஜக்கி வாசுதேவ்!
  10. பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.