1. Blogs

PF கணக்கில் இ-நாமினேஷன் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
PF E-Nomination

இ-நாமினேஷன் (E-Nomination) செய்வதற்கான கடைசி தேதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ நீட்டித்துள்ளது. நாமினி பெயரைச் சேர்ப்பதற்கு டிசம்பர் 31 வரை அவகாசம் கொடுத்திருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டிருப்பது பயனாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இ-நாமினேஷன் (E-Nomination)

இதுதொடர்பாக இபிஎப்ஓ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. இபிஎப்ஓ விதிகளின்படி இ-நாமினேஷனை தாக்கல் செய்வது கட்டாயமாகும். ஏனெனில் இது வருங்கால வைப்பு நிதி , ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் (Insurance) பலன்களை எளிதாக உறுப்பினரின் மரணத்திற்கு பின்பு வாரிசுதாரர்கள் ஆன்லைன் மூலம் உரிமைகோரல்களை தாக்கல் செய்து பெற உதவுகிறது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கணக்கு வைத்திருப்பவர்களை இ-நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகும் கணக்கு வைத்திருப்பவர்கள் இணையதளத்திலேயே ‘மின்-நாமினேஷன்’ வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும்.

இபிஎப்ஓ இணையளத்தில் பயனாளிகள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் வாரிசுதாரர் விவரங்களைப் புதுப்பிக்க முயற்சித்ததால் போர்டல் செயலிழந்ததாகத் தெரிவித்தனர்.

ஆன்லைனில் நாமினியை எவ்வாறு சேர்ப்பது: (How to add Nominee)

இபிஎப்ஓ இணையதளத்தில் சேவைகள், ஊழியர்களுக்கான ‘‘உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை’’ என்பதைக் கிளிக் செய்து நாமினியை சேர்க்கலாம்.

மேலும் படிக்க

ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி!

PF கணக்கில் ஆன்லைன் மூலம் நாமினி நியமனம் செய்வது எப்படி?

English Summary: Extension of time to make e-nomination in PF account! Published on: 30 December 2021, 06:08 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.