1. Blogs

நாளை தங்க பத்திர வெளியீடு: ஒரு கிராம் விலை எவ்வளவு தெரியுமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Gold Bond Issues

மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்க இருப்பதாகவும், 1 கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பத்திரம் (Gold Bond)

நாளை துவங்கவிருக்கும் இந்த பத்திர வெளியீடு, ஐந்து நாட்கள் அதாவது, 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து, 1 கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், இந்த தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். நிதியமைச்சகத்தின் சார்பாக, ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.

வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படும்.

50 ரூபாய் தள்ளுபடி (50 Rs Offer)

‘கிரெடிட், டெபிட்’ கார்டு, வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,736 ரூபாய்க்கு கிடைக்கும். கடந்த நவம்பர் 29ம் தேதி முதல், டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெற்ற இதற்கு முந்தைய எட்டாவது தங்க பத்திர வெளியீட்டில், 1 கிராம் 4,791 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனி நபர்கள் அதிகபட்சமாக, 4 கிலோ தங்கம் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை, 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

மேலும் படிக்க

இணைய வசதி இல்லாமலே பணம் அனுப்பலாம்: ரிசர்வ் வங்கி அனுமதி!

அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில் மகன், மகளை சேர்க்க அனுமதி!

English Summary: Gold bond issue tomorrow: Do you know the price per gram? Published on: 09 January 2022, 01:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.