1. Blogs

ரூ1 கோடி மதிப்பிலான சொத்தை ரிக்‌ஷா தொழிலாளிக்கு எழுதி வைத்த மூதாட்டி!

R. Balakrishnan
R. Balakrishnan
Rickshaw Driver

ஆபத்தான நேரத்தில் காப்பாற்றிய ரிக்‌ஷா தொழிலாளிக்கு தனது ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஒடிசாவை சேர்ந்த மூதாட்டி எழுதி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த மினாதி பட்நாயக் (63) என்ற மூதாட்டி தனது ரூ. 1 கோடி மதிப்புள்ள மூன்று மாடி கட்டிடம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் ஆகியவற்றை ரிக்‌ஷா தொழிலாளி புதா சமலி என்பவருக்கு கொடுத்தார்.

1கோடி ரூபாய் - சொத்து

இதுகுறித்து அந்த மூதாட்டி கூறுகையில், ‘என்னுடைய கணவர் கிருஷ்ண குமார் பட்நாயக் மற்றும் எனது ஒரே மகள் கோமல் குமாரி பட்நாயக் ஆகியோர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்தனர்.

ஆதரவற்ற நிலையில் இருந்த என்னை, எனது உறவினர்கள் யாரும் கவனித்துக் கொள்ளவில்லை. எனக்கு உதவியாக ரிக்‌ஷா தொழிலாளி புதா சமலியின் குடும்பத்தினர் இருந்தனர். எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு கஷ்டத்திலும் அவர்கள் ஆதரவாக இருந்தனர். எனது மகள் சிறு குழந்தையாக இருந்த காலகட்டத்தில் இருந்தே, அவர்கள் எங்களுக்கு பலவகையில் உதவிகளை செய்தனர்.

ஒவ்வொரு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் புதா சமலி குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனர். எனக்கு பின்னால், எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துகளை கொடுப்பதை காட்டிலும், என்னையும் எனது குடும்பத்தையும் கடந்த 25 ஆண்டுகளாக பாதுகாத்த புதா சமலிக்கு சொத்துகளை எழுதி வைக்க முடிவு செய்தேன்.

அதற்காக வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து எனது சொத்துகள் அனைத்தையும் புதா சமலிக்கு எழுதி கொடுத்துவிட்டேன். வாடகை வீட்டில் வசித்துவந்த புதா சமலின் குடும்பத்தினர், இனிமேல் என்னுடன் வசிப்பார்கள். கடந்த இரண்டு மாதங்களாக என்னுடன் தான் உள்ளனர். எனது வாழ்நாள் முழுவதையும், புதா சமலின் குடும்பத்தினருடன் வாழவே ஆசைபடுகிறேன் என்றார்.

நெகிழ்ச்சி

இதுகுறித்து புதா சமலி கூறுகையில், ‘கிருஷ்ண குமார் பட்நாயக் குடும்பத்துடன் எனக்கு நீண்ட கால உறவு உள்ளது. அதற்காக, இவ்வளவு பெரிய சொத்து எனக்கு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மினாதி பட்நாயக்கை எனது தாய் போல் பாவித்து அவரை கடைசி வரை நன்றியுடன் காப்பாற்றுவேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் படிக்க

மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

பள்ளி கட்டணம் செலுத்த EMI வசதி!

English Summary: The old lady who wrote the property worth Rs 1 crore to the rickshaw worker! Published on: 15 November 2021, 08:49 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.