1. Blogs

பூட்டை அதிகம் ஆட்டாதீர்கள்- ட்வீட் பார்க்க லிமிட் வைத்த எலன் மஸ்க்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
viewing limits imposed in Twitter social media platform by Elon Musk

உலகம் முழுவதும் திடீரென்று ட்விட்டர் செயலி முடங்கியதால் அதிர்ச்சியடைந்த அதன் பயனாளர்களுக்கு, மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவலை கொடுத்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க். அப்படி என்ன சொன்னாரு? அது ஏன் விவாத பொருளாக மாறியுள்ளது என்கிற கதையை கீழே காணலாம்.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக கொடி கட்டி பறக்கும் மற்றொரு செயலி ட்விட்டர். அதனை உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகிய எலான் மஸ்க் கைப்பற்றி, அதில் மேற்கொண்ட சீர்த்திருத்தங்களால் இன்னும் அதிகம் கவனம் பெற்றது.

நேற்றிரவு முதல் ஆயிரக்கணக்கான ட்விட்டர் பயனர்களால் சமூக ஊடக தளத்தை அணுக இயலவில்லை. பல பயனர்கள் ட்வீட்களைப் பார்க்க அல்லது இடுகையிட முயற்சிக்கும்போது "ட்வீட்களை மீட்டெடுக்க முடியாது" (Cannot retrieve tweets) என்ற செய்தியை பார்க்க நேர்ந்தது. சில பயனர்கள் "விகித வரம்பை மீறிய பிழைச் செய்தியைப் பார்த்ததாகவும்" (Rate limit exceeded error message) தெரிவித்துள்ளனர்.

இதனால் ட்விட்டர் டவுன் (Twitter Down) என்கிற ஹேஸ்டாக் தீப்போல் பரவியது. இதனைத்தொடர்ந்து மேலும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்.

ட்வீட் பார்க்க கட்டுப்பாடு:

"அதிக அளவிலான டேட்டா ஸ்கிராப்பிங்" மற்றும் "சிஸ்டம் மேனிபுலேஷனை" பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ட்வீட்களில் பார்க்கும் வரம்புகள் தற்காலிகமாக விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அந்த அறிவிப்பில், பணம் செலுத்திய மற்றும் செலுத்தப்படாத பயனர்களுக்கென தனித்தனியாக ஒரு புதிய விதியை கூறினார். அதன்படி ப்ளூடிக் போன்ற verified செய்யப்பட்ட கணக்குகள் ஒரு நாளைக்கு 6,000 இடுகைகளைப் படிக்க இயலும். verified செய்யப்படாத கணக்குகள் ஒரு நாளைக்கு 600 ட்வீட்களை மட்டுமே பார்க்க இயலும். இது முற்றிலும் தற்காலிகமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவினை ட்விட்டர் பயனாளர்கள் பலர் எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளத்தினை பயன்படுத்த கட்டுப்பாடு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என ஒரு சாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கினார் எலோன் மஸ்க். அவர் வசம் ட்விட்டர் சென்ற பின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட தடைசெய்யப்பட்ட பல கணக்குகளை மஸ்க் மீட்டெடுத்துள்ளார். பிரபலங்களுக்கு மட்டுமே இருந்த புளூ டிக் முறையை அகற்றி அதற்கு பதிலாக மாதம் $8 செலுத்த விரும்பும் எவருக்கும் நீல நிற டிக் வழங்கினார். இதனால் பல பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆன்லைன் சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் இணையதளமான டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, ட்விட்டரில் இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட சிக்கல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ட்விட்டர் செயலி முற்றிலுமாக செயலிழப்பது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

RD ஆரம்பிக்க சரியான நேரம்- வட்டி விகிதத்தை உயர்த்திய நிதித்துறை!

English Summary: viewing limits imposed in Twitter social media platform by Elon Musk Published on: 02 July 2023, 11:55 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.