1. Blogs

கார்டு மேல இனி அந்த 16 நம்பர் இருக்காதா? ஆக்ஸிஸ் வங்கி அசத்தல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Fibe Axis Bank credit card

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி மற்றும் இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனமான ஃபைப் (Fibe)  (முன்னர் எர்லிசாலரி (EarlySalary) என அழைக்கப்பட்டது) இணைந்து இந்தியாவின் முதல் நம்பர் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்டு மேல உள்ள 16 நம்பர் சொல்லுங்க சார்- என்கிற மீம் போல தொடர்ச்சியாக இணைய குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஸ் வங்கியின் இந்த நம்பர் இல்லாத கிரெடிட் கார்ட் திட்டம் மிகப்பெரிய புரட்சியாகவே கருதப்படுகிறது.

இந்த நம்பர் இல்லாத கிரெடிட் கார்டில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கார்டு எண், காலாவதி தேதி அல்லது CVV ஆகியவை பிளாஸ்டிக் அட்டையில் அச்சிடப்பட்டியிருக்காது. வாடிக்கையாளர்கள் இதன் மூலம் கூடுதல் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.

இது கிரெடிட் கார்ட் தொடர்பான பாதுகாப்பினை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளரின் அட்டை விவரம் மூலம் அவரது வங்கி செயல்பாடுகளை அணுகும் அபாயத்தையும் குறைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபைப் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு விவரங்களை ஃபைப் ஆப்ஸில் (Fibe app) எளிதாக அணுகலாம். இதன் மூலம் வாடிக்கையாளரின் தகவல்கள் முழுமையும் அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

நம்பர் இல்லாத கிரெடிட் கார்ட்- சலுகை விவரம்:

அனைத்து ரெஸ்டாரன்ட் ஆன்லைன் உணவு டெலிவரியில் 3% கேஷ்பேக், முன்னணி ரைடு-ஹெய்லிங் ஆப்ஸ்களில் உள்ளூர் பயணம் மற்றும் ஆன்லைன் டிக்கெட் தளங்களில் பொழுதுபோக்கு போன்றவற்றில் நல்ல ஆஃபர். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளிலும் 1% கேஷ்பேக் பெறுகிறார்கள்.

இந்த அட்டை RuPay ஆல் இயக்கப்படுகிறது,. இதன் மூலம் வாடிக்கையாளர் இந்த கிரெடிட் கார்டை UPI உடன் இணைக்க அனுமதிக்கிறது. அனைத்து டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களுக்கும் கூடுதலாக அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் வசதியாக tap-and-pay  உள்ளது.

மேலும், இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதற்கான சேரும் கட்டணம் மற்றும் வாழ்நாள் முழுவதும் பூஜ்ஜிய வருடாந்திர கட்டணம் (joining fee and zero annual fee for lifetime) உள்ளது. இந்த கார்டு Fibe இன் தற்போதைய 2.1 மில்லியன்+ வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

காலாண்டுக்கு நான்கு உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான அணுகல், எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத் தள்ளுபடி ரூ. 400 மற்றும் ரூ. 5,000 மற்றும் ஆக்சிஸ் டைனிங் டிலைட்ஸ், புதன் டிலைட்ஸ், சீசன் விற்பனையின் முடிவு மற்றும் ரூபே போர்ட்ஃபோலியோ சலுகைகள் ஆகியவையும் இந்த கார்டு மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

இந்த அறிவிப்பைப் பற்றி பேசிய ஆக்சிஸ் வங்கியின் தலைவர் & கார்ட்ஸ் & பேமெண்ட்ஸ் தலைவர் சஞ்சீவ் மோகே,  “நாங்கள் புதுமையான பார்ட்னர்ஷிப் மாடல்களை உருவாக்கி வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு சலுகைகளுடன் இந்தியாவில் முறையான கிரெடிட்டை அணுகுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த புதிய சந்தைப் புரட்சியில் Fibe உடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் காண்க:

ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்

மினிமம் பேலன்ஸ் தலைவலி இனி வேண்டாம்: Savings account-ல் புதிய வசதி

English Summary: what are the features in numberless Fibe Axis Bank credit card Published on: 11 October 2023, 12:30 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.