1. மற்றவை

மினிமம் பேலன்ஸ் தலைவலி இனி வேண்டாம்: Savings account-ல் புதிய வசதி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Axis Bank Infinity Savings Account benefits here

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, சந்தா அடிப்படையிலான ‘Infinity Savings Account’ என்கிற அக்கௌவுண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மினிமம் பேலன்ஸ் பிரச்சினை இதில் இல்லை என்பது தான் ஹைலைட் ஆன விஷயமே.

இந்த புதுமையான சேமிப்புக் கணக்கினை சப்ஸ்கிரைப் செய்து துவக்கினால், மாதாந்திர இருப்புத் தேவை, டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

Infinity Savings Account- முறையில் வங்கி கணக்கினை தொடங்குவதற்கு சிறிய மாதாந்திர கட்டணமாக ₹150 அல்லது ஆண்டுக் கட்டணம் ரூ1650 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ KYC செயல்முறை மூலம் வாடிக்கையாளர்கள் முற்றிலும் டிஜிட்டல் முறையில் கணக்கைத் திறக்கலாம்.

மேலே குறிப்பிட்டது போல் வங்கி இரண்டு சந்தா அடிப்படையிலான நெகிழ்வான திட்டங்களை வழங்குகிறது - மாதாந்திர மற்றும் ஆண்டு. மாதாந்திர திட்டத்திற்கு ரூ.150 (ஜிஎஸ்டி உட்பட) வசூலிக்கப்படுகிறது மற்றும் குறைந்தபட்ச சந்தா காலம் 6 மாதங்கள். ஆரம்ப 6 மாதங்களுக்குப் பிறகு, திட்டம் 30 நாள் சுழற்சியில் தொடர்கிறது, ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ரூ.150 கழிக்கப்படும். வருடாந்திர திட்டத்திற்கு ரூ.1650 (ஜிஎஸ்டி உட்பட) வசூலிக்கப்படுகிறது மற்றும் 360 நாட்களுக்கு அனைத்து பலன்களையும் வழங்குகிறது. சந்தா முடிவுக்குப் பிறகு திட்டம் தானாகவே புதுப்பிக்கப்படும்.

ஆக்சிஸ் வங்கியின் ‘Infinity Savings Account ' நன்மைகள் சுருக்கமாக:

  • மினிமம் பேலன்ஸ் பராமரிக்கத் தேவையில்லை
  • எந்த உள்நாட்டு பரிவர்த்தனை கட்டணத்திற்கும் கட்டணம் இல்லை
  • இலவச டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் மூலம் வரம்பற்ற பணம் எடுக்கலாம்
  • செக்புக் பயன்பாடு அல்லது வரம்புகளுக்கு மேல் பரிவர்த்தனைகள் / திரும்பப் பெறுதல் ஆகியவற்றில் கட்டணம் இல்லை
  • leap.axisbank.com இல் எண்ட்-டு-எண்ட் டிஜிட்டல் முறையில் கணக்கு திறப்பு

டிஜிட்டல் வங்கியை வாடிக்கையாளர் ஈடுபாட்டின் புதிய களங்களுக்கு உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமை மாடல்களினை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சந்தா அடிப்படையிலான மாடல்களின் கொள்கைகளை இணைப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாற்று வங்கி அனுபவத்தை வழங்க இயலும்” என ஆக்ஸிஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கியின் ‘Infinity Savings Account’  திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு முறை ஆண்டு சந்தா கட்டி கணக்கினை தொடங்கினால் போதும், அடுத்த ஆண்டு வரும் வரை மினிமம் பேலன்ஸ், டெபிட் கார்டு சார்ஜ், பரிவர்த்தணைக்களுக்கான சார்ஜ் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெறலாம்.

மேலும் காண்க:

விவசாயிகள் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு- என்ன திட்டம்?

உடம்பை குறைக்க முடிவு பண்ணிட்டா இந்த பானங்களை மிஸ் பண்ணாதீங்க

English Summary: Axis Bank Infinity Savings Account benefits here Published on: 29 August 2023, 06:18 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.