1. விவசாய தகவல்கள்

மின் இணைப்பு பெற 90% மானியம் - தமிழக அரசு அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, 10,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலைப்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல், 200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க மானியம் வழங்குதல், அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாச்சாரங்கள் ஒலி ஒளி ஆவணமாக பதிவு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.


அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் சில...

  • 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் ரூ.23.37 கோடி செலவில் வழங்கப்படும்.

  • வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.

  • 200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப் பள்ளிகள் ரூ.16.26 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

  • 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும்.

  • 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்படும்.

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

  • 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.

  • 7 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணவர் விடுதிகள் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.

  • 13 மகாத்மா காந்தி தொழிலாளர்கள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டுக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் சுகாதார அங்காடிகள் அமைக்கப்படுவதற்கு ரூ.98 லட்சம் மானியம் வழங்கப்படும்.

  • பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூ.1.80 கோடி செலவிடப்படும்.

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணாக்கர் மற்றும் இளைஞர்களுக்கு நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆண்டிற்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

மேலும் படிக்க...

ஊறவைத்த முந்திரியின் எக்கச்சக்க நன்மைகள்!

வாத நோய்க்கு வித்திடும் உருளைக்கிழங்கு- மக்களே உஷார்!

English Summary: 90% subsidy for electricity connection - Government of Tamil Nadu announces! Published on: 09 May 2022, 10:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.