1. விவசாய தகவல்கள்

தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள்! - கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து, வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராமசுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கூறியதாவது,

பூச்சி தாக்குதலால் பலம் இழக்கும் மரங்கள்

சிவப்பு கூன் வண்டு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் தண்டின் மேல் பகுதியில் சிறு துவாரங்கள் தென்படும். இந்த துவாரங்களின் வாய்ப் பகுதியில் சக்கைகள் வெளியே தள்ளப்பட்டு, ஒருவித பழுப்பு நிற திரவத்தை அந்த வாய்ப் பகுதியில் காணலாம். பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கும்போது மரத்தின் குருத்து பகுதியில் வாடல் போன்ற அறிகுறி தென்படும். இந்த கூன் வண்டுகள் தென்னை மரத்தின் தண்டை குடைந்து அதிலுள்ள திசுக்களை தின்றுவிடும். எனவே, அந்த மரம் பலமிழந்து இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னந்தோப்புகளில் மடிந்து கிடக்கும் மக்கிய தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் புழுக்கள் வாழும். ஆகவே, அவற்றை உடனுக்குடன் அகற்றி விடவேண்டும். எரித்தோ அல்லது புதைத்தோ அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

தென்னை மரங்களில் உள்ள இலைகளை வெட்டக் கூடாது. அப்படியே வெட்டும் பட்சத்தில் 120 செ.மீ. அளவுக்கு விட்டு வெட்ட வேண்டும். விளக்குப்பொறி மற்றும் இனக்கவா்ச்சிப் பொறி வைத்து வண்டுகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

வேதியியல் முறைகள்

இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு வேப்பங்கொட்டை பொடி கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை தென்னை மரங்களின் விரவி மட்டை இடுக்குகளில் வைப்பதன் மூலம் சிவப்பு கூன்வண்டு முட்டை இடுவதை தவிா்க்கலாம்.

சிவப்பு கூன் வண்டுகளை கவர கரும்புச்சாறு 2.5 கிலோ, ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மில்லி அசிட்டிக் அமிலம் (அன்னாசி அல்லது கரும்புச்சாறில் ஊறவைத்தது) இவற்றை நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஓா் ஏக்கருக்கு 30 வீதம் வைக்க வேண்டும்.

தீவிர தாக்குதலுக்கு உட்பட்டு இருந்தால் 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் உடன் 10 மில்லி தண்ணீா் கலந்து வோ் மூலம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மேலும் படிக்க....

பாசன நீர் குறைந்த பகுதிகளுக்கு ஏற்ற மாற்றுப் பயிர் பப்பாளி!

சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

English Summary: Agriculture department advices on pest management methods to contol Red beetles on coconut Published on: 01 June 2021, 12:41 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.