1. விவசாய தகவல்கள்

காவிரிக் குழுக் கூட்டம் - டெல்லியில் 12ம் தேதி நடைபெறுகிறது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cauvery Committee Meeting - Held on 12th in Delhi!
Credit : Dailythanthi

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், டெல்லியில் வரும், 12ம் தேதி, நடைபெற உள்ளது.

நீடிக்கும் பிரச்னை (Prolonged problem)

காவிரி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்களாகப் பிரச்னை நீடித்து வருகிறது.

உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் என நீதித்துறை அளிக்கும் உத்தரவுகள் எதையுமே கர்நாடக அரசு முறையாகக் கடைப்பிடிக்க மறுக்கிறது.

எந்தக் கட்சியும் (No party)

இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால், கர்நாடகத்தில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிடுகின்றன.இதன் காரணமாக பிரச்னை பல வருடங்களாகத் தொடருகிறது. தீர்வு எப்போது கிடைக்குமோ என தமிழகமும் ஏங்கிக் காத்திருக்கும் நிலை உள்ளது.

எவ்வளவு தண்ணீர்? (How much water?)

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவையும், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நீரை, கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால், ஆகஸ்ட் 4 வரை, காவிரி நீர் நிலுவை 8.11 டி.எம்.சி.,யாக உள்ளது.

அணை கட்ட முயற்சி (Try to build the dam)

இந்நிலையில், காவிரியில் மேகதாது என்ற இடத்தில், ரூ.9,000 கோடி மதிப்பீட்டில், அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.

மேலும் பாதிப்பு (More vulnerability)

இந்த அணை கட்டப்பட்டால், மழைக் காலங்களில் கிடைக்கும் காவிரி நீரும் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், வரும் 12ம் தேதி டெல்லியில், நடைபெறுகிறது.

நியாயம் கிடைக்குமா? (Will justice be served?)

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் , தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வலியுறுத்தி, அந்த மாநிலம் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

அதேநேரத்தில் மேகதாது அணை குறித்து விவாதம் நடத்த, கர்நாடக அரசு முயற்சிக்க வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்கான முயற்சியில், தமிழக அதிகாரிகள் கவனம் செலுத்த உள்ளனர்.

காத்திருக்கும் விவசாயிகள் (Waiting farmers)

பல ஆண்டுகளாகத் தொடரும் காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தால், அது விவசாயிகள் வயிற்றில் பாலை வார்க்கும் என்பதால், விவசாயிகளும் தீர்வு கிடைக்கும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்!

English Summary: Cauvery Committee Meeting - Held on 12th in Delhi! Published on: 08 August 2021, 06:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.