1. விவசாய தகவல்கள்

ரபி மற்றும் காரீப் பயிர்களுக்கு இடையிலான வேறுபாடுகள்

KJ Staff
KJ Staff

அனைத்து பயிர்களும் ஒரே பருவத்தில் வளராது. வெவ்வேறு பயிர்களுக்கு குறிப்பிட்ட தேவைகள் மற்றும் பொருத்தமான காலநிலை நிலைகள் உள்ளன. வெப்ப நிலைகளின் அடிப்படையில், இந்தியாவில் பயிர்கள் பரவலாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  • காரீப் பயிர்கள்
  • ரபி பயிர்கள்

காரீப் மற்றும் ரபி பயிர்கள் என்ன,மற்றும் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்.

காரீப் பயிர்கள்:

பருவமழை அல்லது மழைக்காலங்களில் (ஜூன் முதல் அக்டோபர் வரை) பயிரிடப்படும் பயிர்கள் தான் மழைக்கால பயிர்கள் என்றும் அழைக்கப்படும் காரீப் பயிர்கள். அவற்றின் விதைகள் மழைக்காலத்தின் தொடக்கத்தில் விதைக்கப்படுகின்றன மற்றும் மழைக்காலத்தின் முடிவில் பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

காரீப் பயிர்கள் மழை வடிவங்களைப் பொறுத்தது. மழைநீரின் நேரமும் அளவும் காரீப் பயிர்களின் உற்பத்தியை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய காரணிகளாகும். இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காரீப் பயிர்களில் நெல், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, நிலக்கடலை, பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் விதைப்பு நேரம் மாறுபடலாம், ஏனெனில் இது பருவமழையின் வருகையைப் பொறுத்தது, கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் வழக்கமாக மே மாத இறுதியில் விதைகள் விதைக்கப்படுகின்றன, மேலும் பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் விதைகள் ஜூன் மாதத்தில் விதைக்கப்படுகின்றன.

ரபி பயிர்கள்:

குளிர்கால பயிர்கள் என்றும் அழைக்கப்படும் ரபி பயிர்கள், குளிர்காலத்தில் (அக்டோபர் அல்லது நவம்பரில்) பயிரிடப்படும் பயிர்கள். அவற்றின் விதைகள் குளிர்காலத்தின் தொடக்கத்தில் விதைக்கப்படுகின்றன மற்றும் குளிர்காலத்தின் முடிவில் அல்லது வசந்த காலத்தில் பயிர் அறுவடை செய்யப்படுகிறது.

வறண்ட காலங்களில் ரபி பயிர்கள் பயிரிடப்படுகின்றன, எனவே இந்த பயிர்களை வளர்க்க சரியான நேரத்தில் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. இந்தியாவின் முக்கிய ரபி பயிர்களில் கோதுமை,  உருளைக்கிழங்கு மற்றும் கடுகு, ஆளி விதை, சூரியகாந்தி, கொத்தமல்லி, சீரகம் போன்ற விதைகளும் அடங்கும்.

ரபி மற்றும் காரீப் பயிர்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு  என்னவென்றால், ரபி பயிர்கள் குளிர்காலத்தில் வளர்க்கப்படுகின்றன, அதே நேரத்தில் காரீப் பயிர்கள் மழைக்காலங்களில் பயிரிடப்படுகின்றன.

மேலும் படிக்க: 

Kharif crops: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம்!!

தமிழகத்தின் விதைப்புக்காலமும், பயிரிடப்படும் பயிர்களும்

English Summary: Difference Between Rabi And Kharif Crops

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.