MFOI 2024 Road Show
  1. விவசாய தகவல்கள்

உழவர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

Deiva Bindhiya
Deiva Bindhiya
Farmers' Day: Greetings from Chief Minister Stalin

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தனது உழவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந் நாளில், அயராது உழைத்து, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகு எலும்பாக திகழும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கிசான் திவாஸ் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில், வேளாண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு, விவசாயிகளின் பிரச்னைகள், விவசாயத்தில் புதிய சோதனைகள், புதிய தொழில்நுட்பம், பயிர் முறை, விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல விஷயங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுகிறது.

இந்தியா ஒரு விவசாய நாடு என்று கூறப்படுகிறது, இன்றும் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் அல்லது அதனுடன் தொடர்புடைய வேலைகளை நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில், டிசம்பர் 23 அன்று கிசான் திவாஸ் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன? தெரிந்துக்கொள்ளலாம்.

டிசம்பர் 23 ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது பிரதமரும் மூத்த விவசாயியுமான தலைவர் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளாகும். விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயத்திற்காகவும், அவர் பல முக்கிய பணிகளைச் செய்துள்ளார், அதை நினைவுகூரும் விதமாக இன்று நாடு முழுவதும் கிசான் திவஸ் அதாவது உழவர் தினம் கொண்டாடப்படுகிறது. 

எப்போதிலிருந்து உழவர் தினம் கொண்டாடப்படுகிறது(Farmers' Day has been celebrated ever since)

சில மாதங்களுக்கு மட்டுமே நாட்டின் பிரதமராக இருந்த சவுத்ரி சரண் சிங், விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர் நாட்டின் மிகவும் பிரபலமான விவசாய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2001 ஆம் ஆண்டில், விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகளுக்காக டிசம்பர் 23 ஆம் தேதியை உழவர் தினமாகக் கொண்டாட, இந்திய அரசு முடிவு செய்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக உழவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 23, 1902 இல் உத்தரபிரதேசத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சவுத்ரி சரண் சிங், காந்தியால் மிகவும் ஈர்க்கப்பட்டார், மேலும் நாடு அடிமையாக இருந்தபோது, ​​ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காகவும் போராடினார். சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயிகளின் நலனுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். அவர் முக்கியமாக கிராமப்புற இந்தியா, விவசாயிகள் மற்றும் சோசலிச கொள்கைகளில் கவனம் செல்லுத்தினார்.

நில சீர்திருத்தங்களில் சவுத்ரி சரண் சிங் முக்கிய பங்கு(Chaudhry Charan Singh played a key role in land reforms)

இரண்டு முறை உத்தரபிரதேச முதலமைச்சரானார். இருப்பினும், இரண்டு முறையும் அவரது பதவி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருப்பினும், முதலமைச்சராக இருந்தபோது, ​​நிலச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் பெரும் பங்கு வகித்து, விவசாயிகளின் நலன் கருதி பல முக்கிய முடிவுகளை எடுத்தார். உத்தரப் பிரதேச ஜமீன்தாரி மற்றும் நிலச் சீர்திருத்த மசோதாவின் வரைவை சவுத்ரி சரண் சிங்கே தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

நாட்டின் விவசாய அமைச்சராக இருந்த போது, ​​ஜமீன்தாரி முறைக்கு முடிவு கட்ட அயராத முயற்சிகளை மேற்கொண்டார். பிற்காலத்தில் அவர் கிசான் அறக்கட்டளையை நிறுவினார், அதன் இலக்காக நாட்டின் கிராம மக்களுக்கு அநீதிக்கு எதிராக கல்வி கற்பது மற்றும் அவர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்துவது என பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து(Congratulations to the Chief Minister of Tamil Nadu)

"உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைப் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்!" என முதலமைச்சர் ஸ்டாலின் உழவர் தின வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க:

சீசனுக்கு முன்பே வருகை தந்த அப்பூஸ் மாம்பழங்கள்

பிரதமர் பரிசு: தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.255 உயர்வு

English Summary: Farmers' Day: Greetings from Chief Minister Stalin Published on: 23 December 2021, 02:49 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.