Krishi Jagran Tamil
Menu Close Menu

யூரியாவைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்திருந்தால், உரிமம் நிரந்தரமாக ரத்து !

Friday, 08 January 2021 08:38 PM , by: Elavarse Sivakumar
If urea is sold forcibly, the fertilizer license will be canceled permanently

Credit : Eirich

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நபருக்கு அதிகளவு யூரியா உரத்தை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உர விற்பனையாளர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திர பாண்டியன் விடுத்தள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உரம் கையிருப்பு (Fertilizer stock)

இம்மாவட்டத்தில் ராபி (Rabi) பருவ சாகுபடி பணி தீவிர மாக நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் மாவட்டத்தின் பல்வேறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.விவசாயிகளின் நலன் கருதி யூரியா உரம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆட்சியர் விசாரணை  (Collector Inquiry)

இந்நிலையில், மாதந்தோறும் அதிகளவு யூரியா வாங்கியோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரே விவசாயிக்கு அதிக உரம் விற்பனை செய்த உர விற்பனையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு அவர்களின் விவசாயத் தேவைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் வாங்க வருவோர் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

உரிமம் நிரந்தரமாக ரத்து (The license permanently revoked)

இம்மாவட்டத்தில் கடந்த மாதங்களில் ஒரு நபருக்கு அதிகளவு யூரியா உரம் விற்பனை செய்த உர விற்பனையாளர்களின் உர உரிமங்களை 14 நாள்கள் தற்காலிக ரத்து செய்து உத்தர விடப்பட்டது.

இந்நிலை தொடரும் பட்சத்தில் உரக் கட்டுப்பாட்டுச்சட்டம் 1985ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

காய்கறிகளுக்கு காப்பீடு - மார்ச் மாதம் வரை காலக்கெடு!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

யூரியா விற்பனை வலுக்கட்டாயமாக விற்றிருந்தால் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால் உர உரிமம் நிரந்தரமாக ரத்து உர விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை
English Summary: If urea is sold forcibly, the fertilizer license will be canceled permanently

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. NABARD ஆட்சேர்ப்பு 2021: நபார்டில் சிறப்பு ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!! முழு விவரம் உள்ளே!!
  2. தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரிப்பு!
  3. லாரி வாடகை 30% அதிகரிப்பு: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்!!
  4. மலச்சிக்கல் குறித்து ஆயுர்வேதம் சொல்லும் மருந்து! என்ன செய்தால் நிரந்தரமாக வராமல் தடுக்க முடியும்!!
  5. மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!
  6. காப்பீட்டு விதியில் திருத்தம்! காப்பீடு தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்!
  7. பயிர்களில் மகசூலை அதிகரிக்க களை மேலாண்மை அவசியம்!
  8. SBI வங்கியில் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?- விபரம் உள்ளே!
  9. சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!
  10. Post Office கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு அடுத்த மாதம் அதிர்ச்சி காத்திருக்கு!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.