1. விவசாய தகவல்கள்

IMD-இன் சூறாவளி அறிவிப்பு: விவசாயிகள் அச்சத்தில்| TNAU| Agri & Food Startups-க்கு சிறப்பு பயிற்சி

Deiva Bindhiya
Deiva Bindhiya
IMD's Cyclone Alert: Farmers Afraid| TNAU | Special training for Agri & Food Startups

தமிழகம் மற்றும் தென் கடலோர ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கடுமையான சூறாவளி புயல் தாக்கும் என்ற முன்னறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நெற்பயிர்களின் பெரும்பகுதி இன்னும் அறுவடை செய்யப்படாத நிலையில்,

இடைவிடாது மழை பெய்யும் என்ற கணிப்பு கவலையளிக்கும் விடயமாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் 8 முதல் மிதமான முதல் கனமழை வரை கணிக்கப்படுவதால் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. IMD-இன் இந்த கணிப்புகளைத் தொடர்ந்து கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்ட விவசாயிகள் அறுவடையை தீவிரப்படுத்தியுள்ளனர். கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் பாஷா, நெல்லை அறுவடை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2.TNAU: ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி 6.12.22 செவ்வாய்க்கிழமை அன்று இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் கலந்துக்கொள்ள விழைவோர், பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590/- நேரிடையாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு திரையில் தோன்றும் தொலைபேசியை தொடர்புக்கொள்ளவும். 0422-6611214.

3.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நிலவரம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 140 அடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 140.25 அடியாக (இரவு 7 மணி நிலவரப்படி) உயர்ந்துள்ளது. சுரங்கப்பாதை மூலம் கூடுதல் தண்ணீர் எடுக்க வேண்டும் என கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தமிழகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் திறக்கும் நீர் 511 கனஅடியாக இருப்பதால், அதை ஏற்கவில்லை. இருப்பினும், அணைக்கு வரும் சராசரி நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு 1,376 கனஅடியாக சரிந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும், தமிழகத்தில் மழை காரணமாக தண்ணீர் தேவை குறைந்ததாலும் கடந்த சில நாட்களாக அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவை அதிகாரிகள் குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

4.அங்கக வேளாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில், அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் கட்டணப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7, 2022 புதன் கிழமை அன்று நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் இப்பயிற்சி நடைபெறும். முன்பதிவு அவசியம் கட்டணமாக ரூ. 590 வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய பேராசியர் மு. இராமசுப்பிரமணியன் அவர்களை 9486734404 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். 

மேலும் படிக்க:  PMFBY| ரூ.10000/- மானிய உதவியில் Electric motor pump set-கள்| ஆவின் பாலகம் நிறுவ 30% மானியம்

5.வேளாண் மற்றும் உணவு வணிக தொடக்கங்கள் மற்றும் நடத்துநர்களுக்காக சிறப்பு பயிற்சி

கிரசன்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில்- மதுரை கிளையில் *Skill gap Assessment"* குறித்த பயிலரங்கம் *வேளாண் மற்றும் உணவு வணிக தொடக்கங்கள் மற்றும் நடத்துநர்களுக்காக நடத்த ஏற்பாடு செய்துள்ளது* அனுமதி இலவசம். வருகிற 9 டிசம்பர் 2022 மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை, மாதிட்ஷிய ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், எஃப்.பி.ஓ.க்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.களுக்கு கறிப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு சந்தோஷ் - 9942151058 9884282809 என்ற எண்களை தொடர்புக்கொள்ளுங்கள். 

6.ரூ.3க்கு கிலோ வேண்டைக்காய் விற்பனை: விவசாயிகள் துயரம்

மதுரை மாவட்டத்தில் வெண்டைக்காய் கிலோ, 3 ரூபாய்க்கு விற்பனையானதால், அதிகளவில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ணை வாசலில் கிடைக்கும் விகிதத்தில் அறுவடை செய்து கொண்டு செல்வது சாத்தியமில்லை என்பதால் விவசாயிகள் விளைந்த விளைச்சலை வயல்களிலேயே அழுக விட்டுவிட்டனர். தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால், உரிய நேரத்தில் மழை பெய்து, நீர்த்தேக்கங்கள் மற்றும் கிராமத் தோட்டிகளில் போதிய நீர் இருப்பு இருப்பதால், இம்முறை விவசாயப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு, ஓக்ரா சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ.80க்கு நல்ல வருமானம் கிடைத்தது. அதனால், கத்தரி அல்லது கொத்தமல்லி சாகுபடி செய்த விவசாயிகள் பலர், இந்த முறை கருவேப்பிலை வளர்க்க முடிவு செய்துள்ளனர், என்கிறார் எருமார்பட்டயைச் சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டி.

7.இன்று உலக மண் தினம்: உலகிற்கே உணவளிக்கும் அன்னை மண்ணை நினைவுக் கூறும் நாள்

உலக மண் தினம் 2022 "அரிசியின் வேர் மண்: உணவு இங்கே தொடங்குகிறது" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம், மண் மேலாண்மையில் அதிகரித்து வரும் சவால்கள் எதிர்கொள்ளப்படும். மண் விழிப்புணர்வை அதிகரிக்கவும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிப்பதில் மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி "உலக மண் தினம்" கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

8. இயற்கை விவசாயம் குறித்து வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர-இன் கூற்று

நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் தட்டுப்பாடு நிலவிய காலம் இருந்தது என்று மத்திய அமைச்சர் திரு. தோமர் கூறினார். பின்னர் ரசாயன உரத்தை நோக்கி உற்பத்தி சார்ந்த கொள்கை உருவாக்கப்பட்டது, அதன் காரணமாக உற்பத்தி அதிகரித்து, இன்று உணவு தானியங்கள் உபரியாக உள்ளன, இந்த கூற்றை ஆதாரிக்கும் விதமாக, இயற்கை விவசாயம் என்பது காலத்தின் தேவை, இதில் செலவு குறைவு, விளைபொருட்களின் விலை அதிகம். இனி விவசாயக் கல்வியிலும் இயற்கை விவசாயம் வரும். விரைவில் விவசாயக் கல்விப் பாடத்திட்டத்தில் இயற்கை விவசாய முறைகளைச் சேர்க்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜபல்பூர் விவசாய தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (ATARI) மற்றும் குவாலியரில் உள்ள ராஜ்மாதா விஜயராஜே சிந்தியா வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இயற்கை வேளாண்மை குறித்த தேசிய பயிலரங்கில் தலைமை விருந்தினராக திரு. தோமர் இவ்வாறு கூறினார்.

9.தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் புதன்கிழமை 7ம் தேதி தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:

G20| பசுமைக்குடில் PolyGreen House நிறுவ 70% மானியம்| TNAU வழங்கும் பயிற்சி| வெள்ளாடு வளர்ப்பு ...

PMFBY| ரூ.10000/- மானிய உதவியில் Electric motor pump set-கள்| ஆவின் பாலகம் நிறுவ 30% மானியம்

English Summary: IMD's Cyclone Alert: Farmers Afraid| TNAU | Special training for Agri & Food Startups Published on: 05 December 2022, 04:14 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.