1. விவசாய தகவல்கள்

விவசாயிகளுக்கு ஏக்டருக்கு 3 லட்சம் வரை மானியம் அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
National Edible Oil Scheme: Upto 3 lakh subsidy for farmers!

உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல மண் மற்றும் மணல் கலந்த களிமண் உள்ள நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் நமது மாநிலம் எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். எண்ணெய் பனை மரங்களை நாம் நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டியிலிருந்து எக்டருக்கும் ஐந்து டன் வரையும், எட்டாவது வருடத்திலிருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் தரவல்லது என்பது குறிப்பிடதக்கது.

  • தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ், நடவுக்குத் தேவையான தரமான எண்ணெய்ப் பனைக் கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியார் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • நடவு முடிந்து முதல் நான்கு ஆண்டுகள் வரை இளம் எண்ணெய் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு எக்டேருக்கு ரூ.5250ம், எண்ணெய்ப் பனை வயலில் ஊடுபயிர் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக எக்டருக்கு ரூ.5250ம் மொத்தம் எக்டேருக்கு ரூ.10,500 மானியமாக எண்ணெய்ப் பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  • எண்ணெய்ப்பனைக்கு தேவையான பாசன வசதியினை உருவாக்கித்தருவதற்காக, ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.50,000ம், டீசல்/மின்சாதன பம்புசெட்கள் நிறுவ சிறு/குறு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.27,000ம், இதர விவசாயிகளுக்கு ரூ.22,500ம் எண்ணெய்ப் பனை வயல்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சவிகித மானியமும் அரசு வழங்குகிறது.
  • நடவு செய்த எண்ணெய்ப்பனை கன்றுகளை பாதுகாப்பதற்கு கம்பி வலைக்கு ரூ.20,000ம், பழக்குலைகளை அறுவடை செய்யவதற்கான இயந்திரத்திற்கு ரூ.15,000ம், பழக்குலை கருவிக்கு ரூ.2,500ம், இலைவெட்டும் கருவிக்கு ரூ.50,000ம், சிறிய அளவிலான அலுமினிய ஏணிக்கு ரூ.5,000ம், சிறிய உழுவை இயந்திரத்திற்கு ரூ.2,00,000ம் மானியமாக வழங்கப்படுகிறது. மொத்தம் சுமார் 3லட்சத்து 75 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்பட உள்ளது.
  • எண்ணெய்ப்பனையின் பழக்குலைகளுக்கு உத்திரவாத கொள்முதல் விலையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை டன்னுக்கு ரூ.10,516/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சந்தை நிலவரத்திற்கேற்ப இக்கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
  • விவசாயிகள் அறுவடை செய்த பழக்குலைகளை சேமித்து எண்ணெய் பிழியும் ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பும் வகையில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து எண்ணெய்ப்பனை பழக்குலைகள் சேமிப்பு மையங்கள் (Collection Centre) அமைக்கப்பட்டுள்ளன.
  • கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் அரசு நிர்ணயிச்ச விலையில் பழக்குலைக்கான விலையினை விவசாயியின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திடவும் அரசு வழிவகை செய்துள்ளது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ் மேற்காணும் பணிகளை மேற்கொள்வதற்காக 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு, உங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

கொள்முதல் விலைக்கு உத்திரவாதம், பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகம் இல்லாதது, 25 முதல் 30 வருடங்களுக்கு நிலையாந மாத வருமானம், சாகுபடிக்குத் தேவையான அனைத்து பணிகளுக்கும் அரசு மானியம் போன்ற காரணங்களால், எண்ணெய்ப்பனை சாகுபடியானது தமிழகத்தில் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் சிறந்த மாற்றுப் பயிராக கருதப்படுகிறது. தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தில் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, விவசாயிகள் பயன் பெறுமாறு என வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க:

பென்சன் திட்டத்தில் புதிய வசதி- இனி இப்படியும் பணம் செலுத்தலாம்!

வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!

English Summary: National Edible Oil Scheme: Upto 3 lakh subsidy for farmers! Published on: 20 August 2022, 02:26 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.