1. விவசாய தகவல்கள்

PM-kisan ரூ.2,000 இன்னும் வரவில்லையா? இதைச் செய்தால் கிடைக்கும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM-kisan has not received Rs 2,000 yet? Get it if you do this!

PM-Kisan திட்டத்தின் 11- வது தவணைத் தொகையை மத்திய அரசு விடுவித்துவிட்ட நிலையில், அந்தப் பணம் கிடைக்காத விவசாயிகள் இந்த விஷயத்தைச் செய்தால் போதும். பணம் கிடைக்கும்.

ரூ.6,000

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுதான் இந்தப் பணத்தை பயனாளிகளுக்கு வழங்குகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

மே 31ம் தேதி

பிஎம் கிசான் திட்டத்தில் ஏற்கனவே 10 தவணைகள் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டன. 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 11ஆவது தவணைப் பணம் மே 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் விடுவிக்கப்பட்டது.

10 கோடிக்கும் மேலான விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெற்றனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.21,000 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பணம் வரவில்லையா?

ஆனால் பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் நிறையப் பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களின் கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் பணம் கிடைக்காமல் போகலாம். பெயர், வங்கிக் கணக்கு, ஆதார் போன்ற விவரங்கள் சரியாக அப்டேட்டில் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருந்தாலும் பணம் வராது. 

அதை pmkisan வெப்சைட்டில் சென்று சரிசெய்யலாம். ஒருவேளை எல்லாம் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது?பிஎம் கிசான் வெப்சைட்டில் பணம் கிடைக்காத விவசாயிகள் கீழ்க்காணும் எண்களில் புகார் செய்யலாம்.

011-24300606.

18001155266

155261

011-23381092, 23382401

011-24300606

0120-6025109

மேலும் படிக்க...

ஐஸ் வாட்டர் Vs மண்பானைத் தண்ணீர், எதில் பக்கவிளைவுகள்?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: PM-kisan has not received Rs 2,000 yet? Get it if you do this! Published on: 04 June 2022, 10:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.