1. செய்திகள்

விலை சரிவால் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்திய விவசாயி!

R. Balakrishnan
R. Balakrishnan
Fire to the Onion

ஆந்திராவில் தொடர்ந்து வெங்காய விலை சரிந்து வருவதால் கர்னூல் மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயத்தை விவசாயி ஒருவர் தீயிட்டு கொளுத்தி இருக்கிறார். ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் வெங்காய வர்த்தகத்திற்காக மிக பெரிய சந்தையாக கர்னூல் வெங்காய சந்தை விளங்கி வருகிறது.

இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயங்கள் (Onions) கொண்டுவருவது மட்டுமல்லாமல் கர்னூல் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் இங்கு வெங்காயத்தை கொண்டு வருவது வழக்கம்.

வெங்காயம் எரிப்பு (Fire to the Onion)

கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்க கிராமத்தை சேர்ந்த வெங்காய விவசாயியான வெங்கடேசலு என்பவர் அவர் விளைவித்த 50 கிலோ எடை கொண்ட 25 வெங்காய மூட்டைகளை சந்தைக்கு கொண்டுவந்தார். அவர் கொண்டு வந்த வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு 400 ரூபாயாக மட்டுமே போகும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் விளைபொருட்கள் முதலீடு மற்றும் சந்தைக்கு கொண்டு வந்தது, போக்குவரத்து செலவு என கட்டுப்படியாகாது என கொண்டுவந்த வெங்காயம் அனைத்தையும் கீழே கொட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தார். மற்ற விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் தடுக்க முயன்ற நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளாத வெங்கடேஸ்வரலு வெங்காயத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

விலை குறைவு (Fall in price)

வெங்காயத்திற்கான ஆதார விலையாக குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அந்த வெங்காய சந்தையின் அதிகாரி விஜயலக்ஷ்மி கூறுகையில், பல இடங்களில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வெங்காயம் சேதமடைந்திருப்பதாகவும் எனவே இந்த வெங்காயம் ஏற்றுமதிக்கும் சேமிப்பதற்கும் ஏற்றதல்ல.

மேலும் தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிராவில் இருந்து இந்த சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கர்னூலில் வெங்காயத்திற்கான தேவை குறைந்துள்ளது. ஒரு சில விவசாயிகள் நல்ல தரமான வெங்காயத்தை உள்ளூர் சந்தைகளில் அதிக விலைக்கு விற்று விட்டு தரம் குறைந்த விளைபொருட்களை மட்டுமே மொத்த சந்தைக்கு கொண்டு வருவதாகவும், சந்தையில் குவிண்டாலுக்கு குறைந்த பட்சம் 400 ரூபாயாகவும், அதிகபட்சம் 1800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், மொத்தம் 3,000 குவிண்டால் வெங்காயம் வந்த நிலையில் அதில் 50% தரம் குறைந்ததாக இருப்பதாகவும், தரம் குறைந்துள்ளதால் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார்.

விவசாயிகள் கவலை (Farmers suffer)

இருப்பினும் தொடர்ந்து வரத்து அதிகரித்து இருந்தால் கிலோ 2 ரூபாய்க்கு கூட வரக்கூடும் என அங்கிருந்த விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளிடம் இருந்து மட்டும் பெறும் போது 2 முதல் 5 ரூபாய் வரை என பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!

வரலாறு காணாத விலை ஏற்றத்தில் மதுரை மல்லிகை: கிலோ ரூபாய் 4000!

English Summary: The farmer who set fire to the onion due to the fall in prices! Published on: 14 December 2021, 06:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.