1. விவசாய தகவல்கள்

படைப்புழுக்களைத் துவம்சம் செய்யும் கோடை உழவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Summer plowing that starts the worms!

பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், படைப்புழுக்களை கோடை உழவின் மூலம் முழுமையாக அழிக்க முடியும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோடை மழை (Summer rain)

விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பொழியும் மழையே கோடை மழையாக கருதப்படுகிறது.

மழைநீரைச் சேமிக்க (To save rainwater)

கோடை காலத்தில் கிடைக்கப் பெறும் இந்த மழைநீரை சேமித்து வைக்க கோடை உழவு உதவுகிறது. கோடை உழவு செய்வதால், மண்ணின் இறுக்கம் குறைகிறது.

பூச்சிகள் வெளிப்படும் (Insects are exposed)

கோடை உழவினால், பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியப் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, அவை பறவைகளுக்கு உணவாகின்றன.

நிலத்த நீர்மட்டம் உயரும் (The groundwater level will rise)

மழை நீரானது மண்ணுக்கு அடியில் 10 செ.மீ. முதல் 15 செ.மீ வரை ஆழத்துக்குள் செல்வதால், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

மண் அரிப்பைத் தடுக்கும்  (Prevents soil erosion)

நிகழ்பருவம் மற்றும் இனி வரும் காலங்களில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் வர வாய்ப்புள்ளது. எனவே, இதைத் தடுக்க முதல் கோடை மழை பெய்தவுடன் விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்ய வேண்டும்.

பறவைகளுக்கு உணவாகிறது (Feeds the birds)

இதன்மூலம் இப்பழுவின் கூட்டுப்புழுக்கள் அடி மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு அவற்றைப் பறவைகள் உண்பதால், இயற்கை முறையில் செலவின்றி படைப்புழுவின் பொறிப்பு தன்மையைக் கட்டுப்படுத்தலாம்.

மண்ணின் ஈரப்பதம் (Soil moisture)

மேலும், கோடை உழவு செய்வதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். படைப்புழு மட்டுமின்றி இதர பூச்சிகள் மற்றும் வண்டுகளின் கூட்டுப் புழுக்களும் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு அவைகளும் அழிக்கப்படுகின்றன.

படைப்புழுக் கூட்டுப்பழுவை கட்டுப்படுத்த (To control creative worm infestation)

  • தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்வது பயிர்களுக்கு மிகவும் சிறந்தது.

  • ஏனெனில் இதன் மூலம், பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் படைப்புழுக்களை கூட்டுப்புழு பருவத்திலேயேக் கட்டுப்படுத்தலாம்.

கோடை உழவு அவசியம் (Summer plowing is essential)

எனவே விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தைக் கோடை உழவு செய்து, படைப்புழு தாக்குதலில் இருந்து நிலத்தைக் காத்துப் பயனடைய வேண்டும். இவ்வாறு விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!

உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

English Summary: Summer plowing that starts the worms!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.