1. விவசாய தகவல்கள்

சாலையில் தோன்றியத் தக்காளி மலைகள் - விளைச்சல் அதிகரித்ததன் விளைவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tomato hills appearing on the road - the result of increased yields!
Credit : The Hans India

தமிழகத்தின் பலபகுதிகளில் தக்காளி அதிக விளைச்சல் காரணமாக, அதன் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில பகுதிகளில், விவசாயிகள் சாலைகளில் தக்காளிகளை வீசிச்செல்கின்றனர்.

தக்காளி சாகுபடி (Cultivation of tomatoes)

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆண்டு முழுவதும் சாகுபடி (Cultivated throughout the year)

மற்ற பகுதிகளைப்போல இல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி நடைபெறுவதால் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து தக்காளி வாங்கி செல்வது வழக்கம்.

பிற மாநில வியாபாரிகள்  (Other state merchants)

இது தவிர அண்டை மாநிலமான, கேரள மாநில வியாபாரிகளும், உடுமலை சந்தைக்கு வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

பெரும் நஷ்டம் (Heavy Loss)

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகத் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.20 முதல் ரூ.40 வரையே விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

வரத்து அதிகரிப்பு (Increase in supply)

உடுமலை பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் மொத்த வியாபாரச் சந்தைக்குத் தக்காளி வரத்து அதிகளவில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தற்போது போதுமான அளவில் தக்காளி விளைச்சல் உள்ளது. இதனால் வெளியூர் வியாபாரிகளின் வருகையும் குறைந்துவிட்டது.

ரூ.20க்கு விற்பனை (Selling for Rs.20)

இதன் காரணமாக 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி நன்கு பழுத்ததாக இருந்தால் ரூ.20க்கும், காய்வெட்டாக இருந்தால் ரூ.40 வரையும் விற்பனையாகிறது.

செலவு அதிகம் (Expense Excess)

விளைநிலத்தில் விளையும் தக்காளியை வாகனங்களில் ஏற்றி சந்தைக்குக் கொண்டு வருவதற்கு தூரத்தைப் பொறுத்து ஒரு பெட்டிக்கு ரூ.15 முதல் ரூ.30 கொடுக்க வேண்டியதுள்ளது.

இது தவிர ஏற்றி இறக்கும் கூலியாகப் பெட்டிக்கு ரூ.1.50ம் கமிஷன் தொகையாக 10 சதவீதமும் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர பறிப்பதற்கு ஆள் கூலியாக ஒரு நபருக்கு ரூ.400யைக் கொடுக்கிறோம். அவ்வகையில் சாகுபடி செலவு மற்றும் விவசாயியின் உழைப்பைக் கணக்கிடாமல் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரையில் ஒரு பெட்டிக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை செலவாகிறது.

இதனால் 50 பெட்டி தக்காளியை விற்பனைக்குக்கொண்டு வர, கையிலிருந்து ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டிய வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு சில விவசாயிகள் தக்காளியைப் பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். அதேநேரத்தில் செடி வீணாகி விடும் என்று எண்ணும் விவசாயிகள் கூலி கொடுத்துத் தக்காளி பழங்களைப் பறித்து சாலையோரம் வீசி செல்கின்றனர். 

தோட்டத்தை அழிக்கும் விவசாயிகள் (Farmers destroying the garden)

பெரும்பாலான விவசாயிகள் உழவு ஓட்டி தக்காளித் தோட்டங்களை அழிக்கவும் தயாராகி விட்டார்கள்.

விவசாயிகள் வேதனை (Farmers suffer)

ஒவ்வொரு ஆண்டிலும் வரத்து அதிகரிக்கும்போது விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை தொடர்கிறது என்றனர்.

மேலும் படிக்க...

விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!

English Summary: Tomato hills appearing on the road - the result of increased yields! Published on: 02 April 2021, 11:09 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.