1. விவசாய தகவல்கள்

இயற்கை விவசாயத்தில் உள்ள அறிந்துக் கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் !!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Tricks to know in natural agriculture !!

தினமும் நாம் சந்திக்கும் பத்து நபர்களில் ஒருவராவது இயற்கையைக் குறித்தும், இயற்கை வழி விவசாயம் குறித்தும் பேசுவதைப் பார்க்கிறோம். ஆனால் இயற்கை விவசாயம் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. இயற்கை விவசாயம் என்பது பல வருட தொழில்முறைக் கல்வி ஆகும்.

மேலும் இது நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர்களை நேசித்து இயற்கையோடு இணைந்து பயணிக்கும் ஒரு பெரும் பயணமாகும். தற்போது இளைஞர்கள் இயற்கை வழி விவசாயத்தை நோக்கி வருவதைக் காணமுடிகிறது.

மேலும் இளைஞர்களின் வருகை ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபக்கம் அவர்களது எதிர்பார்ப்புகள் அச்சமூட்டக்கூடியதாகவே உள்ளது. அப்படி இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் இளைஞர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பர் அதிக ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் நீர், நிலம், வடிவமைப்பு, விதை, உரம், பட்டம், விதைப்பு, களை, பூச்சியியல், உழைப்பு, உற்பத்தி, அறுவடை, தொழில்நுட்பம், விளம்பரம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் கைதேர்ந்த அறிவைப் பெற்றிருத்தல் அவசியம். இப்போது அவர்கள் அறியக்கூடிய வகையில் எளிய முறை விளக்கங்களை பற்றி பார்க்கலாம்.

நிலம்

நாம் விவசாயம் செய்ய போகும் நிலமானது எந்த வகை மண்ணின் அமைப்பைக் கொண்டுள்ளது என்பதை தெரிந்துவைத்து கொள்வது அவசியம். நிலமானது சமவெளியானதா அல்லது தரிசு நிலமாக இருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டும்.

நீர்

விவசாயத்திற்கு பயன்படும் பண்ணைக்குட்டை அமைக்கும் முறை, மழைநீரைச் சேமிக்கும் வழிமுறைகள் மற்றும் கையாளும் முறை, சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், மூடாக்குப் போடுதல் போன்றவற்றின் மூலமாக நீர் மேலாண்மையை கையாளவது குறித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மின்சாரம்

தன்னுடைய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் அமைப்பைக் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது இலவச மின்சாரமா அல்லது கட்டண மின்சாரமா, சூரிய ஒளி மின் அமைப்பா, மின்மோட்டார்களின் வகைகள் மற்றும் மோட்டர்கள் பழுதானால் சீர்செய்யும் வழிமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.

விதைகள்

இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் இளைஞர்கள் விதைகளை உருவாக்கி, அவற்றை சேமித்து ஒவ்வொரு பட்டத்துக்கு தேவையான விதையை நேர்த்தி செய்து விதைக்கும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

பூச்சியியல்

இயற்கை வழி விவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் இரண்டையும் பற்றி அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

உழைப்பு

பயிர்களுக்கு ஏற்றார் போல் வேலை ஆட்களை பிரிக்கும் அறிவு இருக்க வேண்டும். பயிர்கள் சாகுபடியின் போது ஆண் வேலையாட்களின் தேவையிருக்கிறதா? பெண் வேலையாட்களின் தேவையிருக்கிறதா? அவர்களை வேலைவாங்கும் திறன் உங்களிடம் உள்ளதா என ஒவ்வொரு விவசாயியும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

களை நிர்வாகம்

பயிர்கள் வளரும் போது அதன் இடையில் உள்ள களைகளை அழிக்காமலும், அதேசமயம் பயிரைப் பாதிக்காமலும் அவைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்ற புரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க...

அங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்!

English Summary: Tricks to know in natural agriculture !! Published on: 05 October 2021, 01:41 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.