1. விவசாய தகவல்கள்

இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்துங்கள்- விவசாயிகளுக்கு வேண்டுகோள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Use e-Content Processor- Appeal to Farmers!
Credit: Maalaimalar

இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்திப் பயிர் குறித்த விவரங்களை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கியத்தொழில் (Key industry)

திருப்பூர் மாவட்டம் உடுமலைச் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

பலவிதப் பயிர்கள் (Various crops)

இங்கு தென்னை, வாழை, மா, கரும்பு, நெல், மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களும் பயிரிடப்படுகிறது.

ஆவணங்கள் சேகரிப்பு (Collection of documents)

ஒரு பகுதியில் விவசாய நிலங்கள் எவ்வளவு உள்ளது, என்னென்ன பயிர்கள் எவ்வளவு நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது உள்ளிட்ட ஆவணங்கள் வருவாய் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு விவசாயி குறித்த விவரங்களும் அடங்கலில் பதிவு செய்யப்படுகிறது.

நேரில் பதிவு (Register in person)

இவ்வாறு பதிவு செய்வதற்கு விவசாயிகள் நேரம் ஒதுக்கி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்து அடங்கலில் பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆர்வம் இல்லை (Not interested)

இதனால் பல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் குறித்த விவரங்களை அடங்கலில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

விவசாயிகள் உணரவில்லை (Farmers do not realize)

இது அரசின் திட்டங்கள் விவசாயிகளைச் சென்றடைவதில் இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை விவசாயிகள் உணரவில்லை.

உதாரணமாக உடுமலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் நிலையில் பல விவசாயிகளும் இதுகுறித்த விவரங்களை அடங்கலில் பதிவு செய்வதில்லை. இதனால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக மிகக்குறைந்த அளவிலேயே சின்ன வெங்காய விதைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இ-அடங்கல் திட்டம் (E-Inclusion Plan)

இதுபோன்றச் சூழலைத் தவிர்க்கவும் முழுமையான சாகுபடி பரப்பளவை அறிந்து கொள்ளவும் விவசாயிகளே எளிய முறையில் அடங்கலில் பதிவு செய்து கொள்ளும் வகையில் இ-அடங்கல் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-

வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களின் விவரம், நில உரிமையாளர் பெயர், பட்டா எண், நில மதிப்பீடு மற்றும் வேளாண் பயிர்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இ-அடங்கல் செயலி (E-Inclusion Processor)

விவசாயிகளே தங்கள் மொபைல் போனிலிருந்து இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் நில விவரம், பயிர் விவரம் போன்றவற்றைப் பதிவு செய்ய முடியும்.

ஆன்லைனில் சான்றுகள் பதிவு (Post testimonials online)

மேலும் ஆன்லைன் மூலமாகவே தங்கள் அடங்கல் சான்றுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் விவசாயிகள் அதிக அளவில் இந்த செயலியைப் பயன்படுத்தவில்லை.

தற்போதுள்ள இக்கட்டான சூழலில் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விவசாயப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சூழலில் விவசாயிகள் இ-அடங்கல் செயலியைப் பயன்படுத்திப் பயிர் விவரங்களைப்பதிவு செய்வது கொள்வதன் மூலம் அரசின் உதவிகள் முழுமையாகக் கிடைக்க வழி கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

பருவம் தவறிய மழை-மகசூல் இழப்பை சந்தித்த மாம்பழம் விவசாயிகள்!

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

English Summary: Use e-Content Processor- Appeal to Farmers! Published on: 28 May 2021, 06:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.