1. விவசாய தகவல்கள்

இந்திய அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும், விவசாய மானியங்கள் தொகுப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Various types of agricultural subsidies offered by Govt of India

உரம், நீர்ப்பாசனம், உபகரணங்கள், நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை இந்திய அரசு வழங்கி வருகிறது. விவசாய மானியங்கள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% மற்றும் விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆகும். இந்த பதிவில், இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்தம் எட்டு வெவ்வேறு மானியங்களை தொகுப்பை பார்வையிடலாம்!

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான விவசாய மானியங்கள் (Various types of agricultural subsidies offered in India):

விதை மானியம்

உர மானியம்

பாசன மானியம்

மின் மானியம்

கடன் மானியம்

விவசாய உபகரணங்கள் மானியம்

விவசாய உள்கட்டமைப்பு மானியம்

விதை மானியம் (Seed subsidy)

அதிக மகசூல் தரும் விதைகளை அரசு நியாயமான விலையில் எதிர்கால கட்டண மாற்றுகளுடன் வழங்குகிறது. இத்தகைய செழிப்பான விதைகளை உருவாக்க தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசே மேற்கொள்கிறது என்பது குறிப்பிடதக்கது.

உர மானியம் (Fertilizer subsidy)

குறைந்த விலையில் இரசாயன அல்லது இரசாயனமற்ற உரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்தல். இந்த மானியம் பின்வருவனவற்றை உறுதி செய்கிறது:

விவசாயிகளுக்கு மலிவான உள்ளீடுகள்.

உர விலையில் ஸ்திரத்தன்மை .

உற்பத்திக்கான நியாயமான வருமானம்

விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் கிடைப்பது.

பாசன மானியம் (Irrigation subsidy)

இதன் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில், அரசு நீர்ப்பாசன சேவைகளை வழங்குகிறது.

கால்வாய்கள், அணைகள், குழாய்க் கிணறுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் போன்ற பொதுப் பொருட்களைக் கட்டுவதன் மூலமும், விவசாயிகளிடம் அவற்றின் பயன்பாட்டிற்கு (சில சூழ்நிலைகளில்) குறைந்த கட்டணமோ அல்லது கட்டணம் வசூலிப்பதன் மூலமோ இதை நிறைவேற்ற முடியும். பம்பிங் செட் போன்ற குறைந்த விலை தனியார் நீர்ப்பாசன உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இது இருக்கலாம்.

மின் மானியம் (Electricity subsidy)

மின்சார மானியங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு குறைந்த கட்டணத்தை அரசு வசூலிக்கிறது, என்பதைக் குறிக்கிறது. விவசாயிகள் பாசன நோக்கங்களுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த மானியம், விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாநில மின்சார வாரியங்கள் (SEBs) தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது NTPC மற்றும் NHPC போன்ற நிறுவனங்களிடமிருந்து வாங்கலாம். மின் மானியம் "பம்பிங் செட், ஆழ்துளை கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் பிற நீர்ப்பாசன முறைகளில் முதலீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கிறது ."

கடன் மானியம் (Loan subsidy)

இது விவசாயிகளின், செலவை குறைக்க வழங்கப்படும் உதவியாகும். மேலும் பயிர் காப்பீடு, பிம் கிசான் யோஜனா போன்ற பல திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகிறது. இதற்கான விதிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.

விவசாய உபகரணங்கள் மானியம் (Agricultural Equipment Subsidy)

வேளாண் இயந்திரமயமாக்கலின் துணைத் திட்டம் (SMAM), ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) போன்ற பல்வேறு விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (NFSM) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக (MIDH), மற்றும் தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை (NMOOP) என பல இயக்கங்கள் செயலில் உள்ளன.

விவசாய உள்கட்டமைப்பு மானியம் (Agricultural Infrastructure Grant)

பல சந்தர்ப்பங்களில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க தனியார் முயற்சிகள் போதுமானதாக இல்லை. உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு, நல்ல சாலைகள், சேமிப்பு வசதிகள், மின்சாரம், சந்தை நுண்ணறிவு, துறைமுகங்களுக்கு போக்குவரத்து போன்றவை அவசியமாகும். இந்த வசதிகள் பொதுப் பொருட்களின் வகையின் கீழ் உள்ளன, அவற்றின் விலைகள் அதிகம், ஆனால் அதன் நன்மைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு, பல்வேறு திட்டங்கள் கீழ் விவசாயிகள் பயன் பெற முடியும். இவற்றின் விரிவான விளக்கம் மற்றும் மானியத் தொகை குறித்த தகவலை, இதே இணையத்தளத்தில் பெயர்களையோ, அல்லது பயிர்கள் பெயர்க்கொண்டு பார்யிடலாம் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

EPFO குட் நியூஸ்: இனி இந்த முக்கிய வசதியால், உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம்

Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு

English Summary: Various types of agricultural subsidies offered by Govt of India Published on: 26 February 2022, 11:06 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.