வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால் 40% மானியம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Solar Power Plants

வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் (Solar Panels) அமைக்க, மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின் துறை 40 சதவீதம் மானியம் (40% Subsidy) வழங்குகிறது. அத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், தமிழக மின்வாரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சூரியசக்தி மின் நிலையங்கள் (Solar Power Plants)

மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பதை ஊக்குவிக்க, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதனால், தமிழகத்தில் பல நிறுவனங்கள், நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்களையும், வீடு, கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டடங்களில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களையும் அமைத்து வருகின்றன. தற்போது வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மானியம் வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

மானிய விகிதம் (Subsidy Rate)

அதன்படி, வீடுகளில் 3 கிலோ வாட் வரை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான மொத்த செலவில், 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும், 3 முதல் 10 கி.வாட் வரை அமைக்க, முதல் 3 கி.வாட்டிற்கு 40 சதவீதமும்; 4 முதல் 10 கி.வாட் வரை 20 சதவீதமும் மானியம் கிடைக்கும்.

அடுக்குமாடி குடியிருப்பு, குடியிருப்பு நல சங்கங்கள்,10 கி.வாட் முதல் 100 கி.வாட் வரை மின் நிலையம் அமைக்கலாம். அதற்கு, 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்கமின் துறை சார்பில் வழங்கும் மானிய திட்டத்தை செயல்படுத்தும் பணி, மின் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தல் (Apply)

அதன் சார்பில், மின் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனை, பயனாளிக்கு மானியம் பெற்று தருவது உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளை, 'டெடா' (Teda) எனப்படும் தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை மேற்கொள்ளும்.

மானிய திட்டத்தில் மின் நிலையம் அமைக்க விரும்புவோர், டெடாவின் இணையதளத்திற்கு சென்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மின் வாரிய இணையதளத்தில் (Electricity Webside) விண்ணப்பிக்க வேண்டும். அந்த தளத்தில் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க

யானை மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள்: புதிய திட்டம் அமல்!

இயற்கை முறையிலான மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மானியம் தேவை!

English Summary: 40% subsidy for setting up solar power plants in homes! Published on: 07 December 2021, 05:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.